மழையில் தொலைத்த மஞ்சள் குடை... yel(love) umbrella..

                                                        அவளுக்காக ஒரு முடிவு

                                                                        Chapter 10

காலை ஒன்பது மணி.

Dream Library வழக்கம்போல குழந்தைகளின் சிரிப்பால் நிறைந்திருந்தது. புக்கோட வாசனை, சிறுவர்களோட கேள்வி,  நந்தினியோட குரல் -- அந்த இடத்திற்கு ஒரு உயிர் கொடுக்கும்.

அர்ஜூன் கதவை திறந்து உள்ள வந்தான்.

"Good Morning..." சிரிச்சப்படி சொன்னான்.

"GoodMorning!" Arjun..  என்று சிரித்தப்படியே வரவேற்றாள்.

"இன்று சீக்கிரமா வந்துட்டீங்களா?"

"ஆபிஸ்க்கு போறதுக்கு முன்னாடி உன்னை... அப்படின்னு... Library-யை பாத்துட்டு போகலாம்னு".

வார்த்தையைத் திருத்திய விதத்தைப் பார்த்து நந்தினி சிரிச்சா..

"library-யா... இல்ல என்னையா?"

அர்ஜூன் சிரித்தபடியே தலையைத் தாழ்த்தினான்.

"ரெண்டுமே..."

அந்த பதிலைக் கேட்ட நந்தினியின் கன்னங்கள் லேசாகச் சிவந்தன.

அன்று நூலகத்தில் ஒரு சிறிய அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.

"Children's Reading Camp - Volunteers Needed."

"இது என்ன?" என்று கேட்டான் அர்ஜூன்.

"அடுத்த வாரம் குழந்தைகளுக்காக ஒரு reading camp நடத்தப் போறோம். ஆனால் sponsor கிடைக்கல. செலவு கொஞ்சம் அதிகம்."

"எவ்வளவு ஆகும்?"

"சுமார் இருபதாயிரம்."

"அதனால கொஞ்சம் குறைச்சு பண்ணலாம்னு யோசிக்கிறேன்."

அவள் அதை சாதாரணமாகச் சொன்னாலும், அவள் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை அர்ஜூன் கவனிச்சான்.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்தபோதும், நந்தினி சொன்ன வார்த்தைகள்தான் அவன் மனதில் ஒடிக்கொண்டிருந்தன.

"குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்கள் கிடைக்கணும்..."

"யாரும் காசு இல்லன்னு படிக்காம இருக்கக்கூடாது.."

அவள் சொன்ன ஒவ்வொரு கனவும் அவன் மனதில் எதிரொலித்தது.

திடீரென்று ஒரு முடிவு எடுத்தான்.

அடுத்த நாள் காலை.

அர்ஜூன் தனது நண்பன் கார்த்திக்கைச் சந்தித்தான்.

"டா... ஒரு HELP வேணும்."

"சொல்லு."

"நம்ம OFFICE-ல CSR FUND இருக்குல?"

"ஆமா."

"அதுல இருந்து ஒரு LIBRARY Projectக்கு sponspor arrange பண்ண முடியுமா?"

கார்த்திக் ஆச்சரியமாகப் பாத்தான்.

"நீ எப்போ இருந்து social service?"

அர்ஜூன் சிரிச்சான்.

"எனக்காக இல்லடா..."

"ஒருத்தரோட கனவுக்காக."

கார்த்திக் எதுவும் கேட்கல..

"சரிடா.. TRY பண்ணலாம்."

3 நாட்கள் கழிச்சி..

DREAM LIBRARY.

நந்தினி புக் அடுக்கிட்டு இருந்தா..

அர்ஜூன் உள்ளே வந்தான்.

கையில் ஒரு கவர்.

"இது என்ன?" னு கேட்டாள்.

"OPEN பண்ணி பாரு."

அவள் மெதுவா திறந்தா.

உள்ளே ஒரு CHEQUE.

RS 20000.

அதோடு ஒரு லெட்டர்.

"Children's Reading Camp க்கான சிறிய உதவி."

நந்தினியின் கண்கள் விரிந்தது.

"அர்ஜூன்.... இது...?"

"camp cancel ஆகக்கூடாது தோணிச்சு."

"ஆனா.... இது.. இவ்வளவு பெரிய amount..."

"நா மட்டும் இல்ல. என்னோட ஆபிஸ்-மும் ஹெல்ப் பண்ணுச்சு."

 நந்தினி கண்கள் கலங்கின.

"தேங்கஸ்"

"ஆனா இந்த ஒரு வார்த்தை போதாது."

"அப்போ?"

"ஒரு promise பண்ணு."

"என்ன?"

"உன் கனவை ஒரு நாளும் விட்டுடாத."

சில நிமிடம் அமைதி..

அப்பறம் நந்தினி மெதுவா தலையசைச்சா.

"Promise".

அந்த  நேரத்துல ஒரு பையன் ஒடி வந்தான்.

"அக்கா... camp நடக்குமா?"

 நந்தினி கண்ணீரை மறைச்சுக்கிட்டே.

"கண்டிப்பா நடக்கும்."

"யார் ஹெல்ப் பண்ணாங்க?"

அந்த பையன் கேட்டதும் , நந்தினி அர்ஜூனை பாத்தா.

அவன் உடனே வேண்டாம்ன்னு தலையசைத்தான்.

நந்தினி சிரிச்சா.

"ஒரு நல்ல மனசுக்காரர்.

மாலை வீட்டுக்கு திரும்பிய அர்ஜூன் பால்கனியில் நின்னு வானத்தை பாத்தான்.

இன்னைக்கு அவன் மனசில் ஒரு வித்தியாசமா நிம்மதி இருக்கு.

நந்தினியோட முகத்தில் பாத்த அந்த சந்தோசம்.

அதுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்ன்னு அவனுக்கு தோனுச்சு.


அதே நேரம் நந்தினி அவ டைரில ஒரு வரி எழுதுனா.

    "சில மனிதர்கள் நம்ம வாழ்க்கைக்கு வர்றது... நம்ம கனவுகளை நம்ப வைக்கத்தான்."

அந்த வரியின் கீழே அவளும் ஒரு பெயர் எழுதினா.

"அர்ஜூன்..."

அவ எழுதிட்டு சிரிச்சா.

இரண்டு இதயங்களிலும் காதல் மெதுவா முளைக்க ஆரம்பிக்கு.

ஆனால்...

அவங்களுக்கு தெரியல.

கடந்த காலத்தின் ஒரு ரகசியம், அந்த காதலை சோதிக்கக் காத்திருந்தது...

To be continued.....💛

Chapter 9







Comments

Popular posts from this blog

மீ டைம்

பெண்ணின் பூரணத்துவம் ....

என்னவன்