மழையில் தொலைத்த மஞ்சள் குடை.. Yel(love)Umbrella..
ஒரு கனவின் தொடக்கம்.
CHAPTER 9
காலை சூரியன் மெதுவா மேகங்களுக்கு இடையே எட்டி பாத்து கொண்டிருந்தது. நேத்து பெய்த மழையோட ஈரம் இன்னும் ரோட்டுல இருந்தது.
அர்ஜூன் வழக்கத்துக்கு மாறா சீக்கிரம் லைப்ரேரிக்கு வந்தான்.
லைப்ரேரி கதவு திறந்திருந்தது.
உள்ள வந்ததும், குழந்தைகளோட சிரிப்பு சத்தம் கேட்டது.
"அக்கா.... இந்த புக் எனக்கு! "
"இல்ல இல்ல... முதல்ல நா தான் எடுத்தேன்".
இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுட்டு இருந்தாங்க.
நந்தினி சிரிச்சுட்டே அவங்ககிட்ட போனா.
"சண்டை போடக்கூடாது... இந்த வாரம் நீ படி, அடுத்த வாரம் அவன் படிக்கட்டும். சரியா?"
இரண்டு பேரும் சரின்னு அமைதியா போனாங்க.
அத பாத்த அர்ஜூன் ஆச்சரியப்பட்டான்.
"இவ்வளவு சீக்கிரமா சமாதானம் பண்ணிட்டியே?"
"அவங்களோட கோபம் ரொம்ப நேரம் இருக்காது. பெரியவங்களுக்கு தான் ஈகோ அதிகம்".
அவ சிரிச்சா.
அர்ஜூனும் சிரிச்சான்.
மதியம் வரை இருவரும் LIBRARY புக் எல்லாம் அரேஜ் பண்ணி வைச்சாங்க.
ஒரு corner பழைய புக் நிறைய இருந்தன.
"இவ்ளோ பழைய புக் என்ன பண்ணப் போற?" ன்னு கேட்டான் அர்ஜூன்.
நந்தினி அந்த புக்கை வருடியபடி,
"இவங்களாலதான் என் கனவு ஆரம்பிக்கப் போகுது."
"கனவா?"
அவள் மெதுவாக தலையசைத்தாள்.
"என்னோட ஆசை... ஒரு நாள், பெரிய குழந்தைகள் நூலகம் ஆரம்பிக்கனும்."
அர்ஜுன் அவளைப் பாத்தா.
"இந்த லைப்ரேரி மாதிரியா?"
"இல்ல... இதைவிட பெரியது."
அவளது கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
"கிராமத்துல இருக்குற குழந்தைகளுக்கும், காசு இல்லாத குடும்பங்களுக்கும், இலவசமா புக் கிடைக்கனும்."
"யாரும் 'எனக்கு புக் வாங்க முடியல'ன்னு சொல்லக்கூடாது."
"படிக்க ஆசை இருந்தா... கதவு திறந்தே இருக்கணும்."
அவள் பேசும்போது இருந்த உற்காசத்தை பாத்த அர்ஜூன் கொஞ்சம் அமைதியா இருந்தான்.
"இது ரொம்ப பெரிய கனவு."
"ஆமாம்."
"ஆனா முடியாதது இல்ல."
அந்த வார்த்தையை அர்ஜூன் சொன்னதும், நந்தினி ஆச்சரியமாக அவனை பாத்தா.
"நீங்கதான் முதல் ஆள்... 'முடியாது'ன்னு சொல்லாம 'முடியும்'ன்னு சொல்றது."
அர்ஜூன் சிரிச்சா.
"கனவு காண்றவங்களை நிறுத்துறது ஈசி."
"அந்த கனவை நம்புறது தான் கஸ்டம்."
மாலை நேரம்.
இரண்டு பேரும் லைப்ரேரி பூட்டிவிட்டு வெளியே வந்தாங்க.
அருகில் இருந்த பார்க்கில் சில நிமிசம் இருந்தாங்க.
குழந்தைகள் விளையாடிட்டு இருந்தாங்க.
அவங்கள பாத்தப்படி நந்தினி மெதுவாகச் சொன்னான்,
"என் அப்பாவுக்குத் தான் புக் ரொம்ப பிடிக்கும்."
"சின்ன வயசுல ஒவ்வொரு ஞாயிறுகிழமையும் என்னை லைப்ரேரி கூட்டிட்டு போவாரு".
"ஒரு விபத்துக்குப் பிறகு..."
அவள் திடீரென்று அமைதியானாள்.
அர்ஜூன் அவளைப் பாத்தா.
"என்ன ஆச்சு"?
"ஒன்னுமில்லை..."
"அப்பறம் அவரால பழைய மாதிரி வெளியே போக முடியல."
"ஆனா இன்னைக்கும் அவங்க எங்கிட்ட சொல்ற ஒரே வார்த்தை..."
அவ மெதுவா சிரிச்சா.
'காசு இல்லாம இருக்கலாம்... ஆனா அறிவு இல்லாம இருக்கக்கூடாது.'
அந்த வார்த்தை அர்ஜூனின் மனசில பதிந்தது.
"உங்க அப்பா ரொம்ப நல்லவரா இருப்பாரு போல."
"ஆமாம்..."
"எனக்கு ஹீரோன்னா... அவர்தான்."
அர்ஜூன் அமைதியாக தலையசைத்தான்.
அவனுக்குத் தெரியவில்லை...
நந்தினி பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்தான்...
பல வருசங்களாக அவன் மனசுல குற்றவாளியா இருக்கிறாருன்னு..
வீட்டுக்கு வந்த அர்ஜூன், பால்கனில நின்னு வானத்தை பாத்தா.
இன்னைக்கு நந்தினி கனவை பத்தி சொல்லும் போது, அவன் மனசில ஒரு எண்ணம் வந்துச்சு.
"அவளோட கனவு நிஜமாகனும்".
அந்த எண்ணம் ஏன் வந்துச்சுனு அவனுக்கே தெரியல.
அது காதலா....
இல்ல.
அவள் மீது வந்த ஆழமா அக்கறையா?
அவனுக்கு இன்னும் புரியல..
ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும்.
நந்தினி கனவு அவளுடையது மட்டும் இல்லன்னு,
அத நிறைவேத்தனும் ஆசை, அர்ஜூனின் மனசுல முளைக்க ஆரம்பிச்சிருக்கு..
TO BE CONTINUED....

Comments