முகம் பார்க்கா முகநூல் நட்பு...
சர சர சார காத்து வீசும் போது; ஜாட பாத்து பேசும் போது; சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே... என்ற பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டு இருந்தாள் மித்ரா... பெயருக்கு ஏற்றார் போல் அனைவரிடமும் நட்புடன் பேசுபவள். ஆனால் அமைதியாக இருப்பாள் பெரும்பாலும். மித்ரா பொழுதுபோக்குக்காக கதை எழுதி அவளது பிளாக்கில் பதிவிடுபவள். ...... இனியா கல்லூரிப் பேராசிரியர். புத்தக வாசிப்பு என்றால் உயிர்.. ஜாலியான நபர். எதுவும் ஈசியா கையாளுபவள். அனைவரோடும் எளிதில் பழகிவிடுவாள். ஃபேஸ்புக்(முகநூல்) நம்ம பாஷையில் மூஞ்சி புத்தகம்.. இன்று பலரின் உலகம் அதுவே... பொழுது போக வேண்டும் என்பதற்காக பேஸ்புக்கை திறந்து இப்பொழுது முழு நேரமும் அதிலே மூழ்கிவிடுகின்றனர். அதுவே வாடிக்கையாகி விடுகிறது சிலருக்கு... அதனால்தன் என்னவோ மித்ரா ஃபேஸ்புக் அன்இன்ஸ்டால் செய்துவிட்டால். ஆனால் அவள் பின்தொடரும் சிலரின் பதிவுகள் ஃபேஸ்புக்கில் மட்டுமே இடம்பெறுகின்றன. அதனால் மித்ரா ஃபேஸ்புக் இன்ஸ்டால் செய்து அவளது முகப்பை லாக் செய்திருப்பாள். ஒருநாள் அவள் முகநூல் பக்கத்திற்கு ஒரு செய்தி வந்தது... "ஹாய் மித்ரா" என்ற...