கண்களால் பேசும் பெண்...
நான் பிரதிலிபி ஆப்பில் ஒரு தலைப்பு பார்த்தேன்...
"கண்களால் பேசும் பெண்"
இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களே.
கண்களுக்கு அதிகம் பேசும் சக்தி உண்டு. வாய்மொழி வார்த்தைகளை விட கண்களால் பேசும் வார்த்தைகள் அபரிதமான அர்த்தங்கள் உண்டு..
பிறவியிலேயே ஊமையாகவும், செவிடாகும் இருப்பவர்களுக்கு இயற்கையாகவே கடவுள் கொடுத்த சக்தி கண்கள்..
பொதுவாகவே இந்த கண்களை கொண்டு எதிரில் வருபவர் நல்லவரா, கெட்டவரா என்று அறியும் ஆற்றல் இருக்கும்.
"பொன்னியின் செல்வனில்" -
மந்தாகினி உயிர் பிரியும் தருணத்தில்; சக்கரவர்த்தி சுந்தரசோழன் மடியில் படுத்து தன் கண்களாலேயே தான் அனுபவித்த மொத்த துன்பத்தையும், அவர்மீது கொண்ட காதலையும் வெளிப்படுத்தினாள்.
மந்தாகினிக்கும் ஏதோ அரிய சக்தி இருந்தது. அதனால்தான் அருள்மொழிவர்மனை பலமுறை காப்பாற்றினாள்.
கடைசி நேரத்திலும் சக்கரவர்த்தியும் காப்பாற்றினாள்.
ஒருவர் மேல் நாம் கொண்ட அன்பை வாய்மொழியாக சொல்வதை விட கண்களால் சொல்வது சிறந்தது. நம்மை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே நம் கண் மொழியையும், அர்த்தத்தையும் புரிய முடியும்.
அதைத்தான் சக்கரவர்த்தி சுந்தரசோழன் ஊமை ராணி ஆகிய மந்தாகினியின் அதீத அன்பை கண்மொழியை கொண்டு
அறிந்து கொண்டார்...
அதைப் போல் தான் குந்தவையும் வந்தியத்தேவனும் குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் கொண்டனர்.
அவள்தான் இளையபிராட்டி என்றும் தெரியாது; அவன் தான் தன் தமையன் ஆதித்த கரிகாலனிடம் ஓலை கொண்டுவந்த தூதுவன் என்றும் தெரியாது.
இந்த கதையை பற்றி பேசும்போது நந்தினி நாம எப்படி மறக்க முடியும்?
அவளோட கடைக்கண் பார்வை கிடைக்க பல பேர் தவம் கிடந்தனர்..
ஆனால் அவள் பார்வையில் வஞ்சம், வெறுப்பு, கோபம் மட்டுமே காணப்படும்...
அந்த கண் பார்வைதான் பல வரலாறு படைக்க இருந்த கரிகாலனை வீழ்த்தியது...
பெண்களின் கண் மொழிகளால் ஒரு நாட்டை வீழ்த்தவும் முடியும், வாழ வைக்கவும் முடியும்.
இப்படிப் பல உதாரணங்கள் கண்களால் பேசும் பெண்கள் என்ற தலைப்பிற்கு பொருத்துவார்கள்.
ஆனால் எனக்கு ஞாபகம் வந்தவை இந்த கதாபாத்திரங்கள் இரண்டும்...
அதுவும் குந்தவையும் வந்தியத்தேவனும் பரிமாறிக்கொள்ளும் கண் மொழிகள் என்னை கவர்ந்தவை....
Comments