குறிக்கோள்.
மதியம் நித்ராதேவி சுத்தி இருக்கிற மரம் முலமா சிலுசிலுன்னு காத்து கொடுத்து, மாணவர்களை தழுவ முயற்சித்து கொண்டு இருந்தது. இளங்கலை மேலாண்மை மூன்றாம் ஆண்டு : மதியம் 2 மணி , கடைசி வகுப்பு ஆசிரியர் குழு முறை கலந்துரையாடக்காக மாணவ மாணவியருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அது, கடைசி வகுப்பு என்பதால் ஆசிரியர் மாணவர்களை உற்சாகப்படுத்த, "என்னென்ன டாபிக் பேசனும் நினைக்கிறீர்களோ? பேசலாம். யாரு பஸ்ட் வந்து பேசப் போறாங்க பார்ப்போம்"? என்றார். சில மாணவமணிகள் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து கொண்டு இருந்தனர். சிலர் என்ன தலைப்பு கொடுத்து பேசலாம் தீவிரமாக யோசிச்சுகிட்டு இருந்தனர். பேசத் துவங்கினர் சிலர். நன்றாக பேசினர்; கைதட்டும் வாங்கினர். அடுத்த முறை நக்ஷத்ரா கம்பீரமாக முன் சென்றாள். படிப்பில் சுமாராக மதிப்பெண் வாங்குபவள். அனைவரும் இவள் என்னத்த பேச போறா என்பதுபோல் இருந்தனர். வணக்கம்! நா பேச போற டாபிக் குறிக்கோள் (ambition). (சில மாணவர்கள் தங்களுக்குள் "சுத்தம் "என்று முணுமுணு...