நேரம் பொன்னது...⏳

அனைவருக்கும் வணக்கம்.
 ஒரு குட்டி ஸ்டோரி பார்க்கலாமா.... நேரத்தோட முக்கியத்துவம்  பற்றிய கதை.
 

வாங்க கதைக்கு போகலாம்
 ஒரு ஊருல ஒரு குட்டிப் பையன் இருந்தான். பையன் பேரு ரோகித்
சுட்டிபையன் அவங்க அம்மா வீட்டுப்பாடம் டெய்லி பண்ணுன்னு சொல்லிட்டே இருப்பாங்க.
ஒரு நாள் அவன் ஸ்கூல்க்கு போகாமல் பக்கத்தில் இருக்கும் வயலுக்கு போய் விளையாடினான்.
 அங்க விவசாயி விதை விதைத்து கொண்டு இருந்தான். அவரிடம் போய் என்னோட விளையாட வருவிகளா?கேட்டான். அவர் முடியாது பா. இன்னும் கொஞ்ச நாள்ல மழை காலம் வரும்.அப்போ அறுவடைக்கு பயிர் தயார் நிலையில் இருக்கனும் சொன்னார். 
ரோஹித் சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு மரத்தின் அடியில் எரும்பு கூட்டங்கள் சென்று கொண்டு இருந்தன.  
ரோகித் அதனிடம் சென்று "என் கூட விளையாட வரீங்களா"? என்று கேட்டான். அதற்கு எறும்பு கூட்டத்தின் தலைவன் நாங்கள் உணவை சேமிக்க சென்று கொண்டு இருக்கிறோம் மழைக்காலம் அருகில் இருக்கிறது என்று கூறியது. ரோகித், "மழைக்காலம் வர நேரம் இருக்கிறதல்லவா; பின்பு ஏன் இப்பொழுது உணவை சேமிக்கி வேண்டும்? என்று கேட்டான். எறும்பு கூட்டத்தின் தலைவன் நாங்கள் உயிர்வாழ இப்பொழுதே சேமிக்க வேண்டும். நீ வேண்டுமென்றால் மழைக்காலத்தில் வா நாங்கள் உன்னுடன் விளையாடுகிறோம் என்று  கூறி அவனைக் கடந்து சென்றது.  சிறிது தூரத்தில் தேனி ஒன்று பறப்பதை பார்த்தான் 
அதனிடம் போய் நீ என்னுடன் விளையாட வருகிறாயா என்று கேட்டான். அதற்கு தேனி இனிய பொழுது இப்பொழுதுதான் பூக்கள் நிறைய பூத்து கிடைக்கும் அதனிடம் உள்ள தேனை நான் இந்த பருவத்திலேயே சேமிக்க வேண்டும் என்று கூறி பறந்தது.
இவர்கள் யாருக்கும் சந்தோசத்தை அனுபவிக்க தெரியவில்லை என்று கூறி  விளையாடினான்.
பொழுது கழிந்தது அவன் பசிக்கும் போது அவன் வீட்டை நினைவு கூர்ந்து வீட்டிற்கு சென்றான். அவன் அம்மா படிக்கவில்லையா ஸ்கூலுக்கு போகவில்லையா என்று கேட்டார் அவனது இருக்கு சரி அம்மா படிக்கிறேன் என்று படிக்க சென்றான் ஆனால் விளையாட மட்டுமே செய்தான். நாட்கள் கழிந்தது பரீட்சை நெருங்கியது தேர்வு முடிந்தது மதிப்பெண்கள் குறைவாகவே பெற்றான் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தான் தன் தாயிடம் நான் படிப்பதற்கு நேரமே இல்லை நான் என்ன செய்வது என்று கேட்டான். அதற்கு அவன் அம்மா பக்கத்தில் இருக்கும் வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார் அங்கே அவன் விவசாயி தேனி எரும்பை பார்த்தான். திரும்பும் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தன அப்பொழுதுதான் ரோகித்திற்கு தான் செய்த தவறு புரிந்தது காலத்தே பயிர் செய் என்று சொல்வது நான்தான் நேரத்தை வீணாக்கி விட்டேன் என்று வருந்தினான் தன் தாயிடம் இனிவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று கூறினான்.
இந்த கதையின் மூலம் அறிந்து கொள்வது 
*நேரம்  அபூர்வமானது.
* நேரத்தை வீணாக்கக்கூடாது.
* நமக்காகவும் மற்றவர் நேரத்தை வீணாக்க கூடாது.

"Early to bed and early to rise make the man healthy,wealthy and wise."
டாடா,
சக்தி....


Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)