Posts

மழையில் தொலைத்த மஞ்சள் குடை... yel(love) umbrella..

Image
                                                               அவளுக்காக ஒரு முடிவு                                                                                           Chapter 10 காலை ஒன்பது மணி. Dream Library வழக்கம்போல குழந்தைகளின் சிரிப்பால் நிறைந்திருந்தது. புக்கோட வாசனை, சிறுவர்களோட கேள்வி,  நந்தினியோட குரல் -- அந்த இடத்திற்கு ஒரு உயிர் கொடுக்கும். அர்ஜூன் கதவை திறந்து உள்ள வந்தான். "Good Morning..." சிரிச்சப்படி சொன்னான். "GoodMorning!" Arjun..  என்று சிரித்தப்படியே வரவேற்றாள். "இன்று சீக்கிரமா வந்துட்டீங்களா?" "ஆபிஸ்க்கு போறது...

மழையில் தொலைத்த மஞ்சள் குடை.. Yel(love)Umbrella..

Image
     ஒரு கனவின் தொடக்கம்.      CHAPTER 9 காலை சூரியன் மெதுவா மேகங்களுக்கு இடையே எட்டி பாத்து கொண்டிருந்தது. நேத்து பெய்த மழையோட ஈரம் இன்னும் ரோட்டுல இருந்தது. அர்ஜூன் வழக்கத்துக்கு மாறா சீக்கிரம் லைப்ரேரிக்கு வந்தான். லைப்ரேரி கதவு திறந்திருந்தது. உள்ள வந்ததும், குழந்தைகளோட சிரிப்பு சத்தம் கேட்டது. "அக்கா.... இந்த புக் எனக்கு! "  "இல்ல இல்ல... முதல்ல நா தான் எடுத்தேன்". இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நந்தினி சிரிச்சுட்டே அவங்ககிட்ட போனா. "சண்டை போடக்கூடாது... இந்த வாரம் நீ படி, அடுத்த வாரம் அவன் படிக்கட்டும். சரியா?" இரண்டு பேரும் சரின்னு அமைதியா போனாங்க. அத பாத்த அர்ஜூன் ஆச்சரியப்பட்டான். "இவ்வளவு சீக்கிரமா சமாதானம் பண்ணிட்டியே?" "அவங்களோட கோபம் ரொம்ப நேரம் இருக்காது. பெரியவங்களுக்கு தான் ஈகோ அதிகம்". அவ சிரிச்சா. அர்ஜூனும் சிரிச்சான். மதியம் வரை இருவரும் LIBRARY  புக் எல்லாம் அரேஜ் பண்ணி வைச்சாங்க.  ஒரு corner  பழைய புக்  நிறைய இருந்தன. "இவ்ளோ பழைய புக் என்ன பண்ணப் போற?" ன்னு கேட்டான் அர்ஜூன். நந்தினி அந்த பு...

மழையில் தொலைத்த மஞ்சள் குடை.. Yel(love) Umbrella

Image
                                                மனதை தொட்ட அமைதி                                                                                       Chapter 8 மழை  நின்னாலும், அந்த மழை இரவோட நினைவு மட்டும் அர்ஜூனின் மனசுல இன்னும் ஈரமா இருந்தது. வீட்டுக்கு வந்ததும், ஹெல்மெட்டை table மேல வைச்சுட்டு பால்கனில நின்னான். எதிரே street-light வெளிச்சத்துல மழைத்துளிகள் இன்னும் ரோட்டுல மின்னிட்டு இருக்கு. அவன் மனசுல நந்தினி சொன்னதும் கேட்டுட்டே இருந்ததுச்சு. "எல்லா விசியத்துக்கும் நாம நினைக்கிற காரணம்தான் உண்மையான காரணமா இருக்காது". "இல்ல... நா நினைக்கிறது தப்பா இருக்க முடியாது.." ன்னு அவனுக்கு அவனே சொல்லிகிட்டாலும் அவனால அமைதியா இருக்க...

சில பேரை வயசு பெரியவர்களாக்காது… வாழ்க்கைதான் பெரியவர்களாக்கும்

Image
  ந ம்ம எல்லாருக்கும் childhood ஒரே மாதிரி இருக்காது. சில பேருடைய வாழ்க்கை ஸ்கூல், காலேஜ், ப்ரேண்டஸ், ஃபன், ட்ரீம்ஸ்ன்னு இயல்பா இருக்கும்.  ஆனா சிலரோட வாழ்க்கை அப்படி இல்ல.... அந்த வயசுக்கான carefree life வாழ முடியாது. ஒரு நாள், தீடீர்னு ஒரு சம்பவம் எல்லாத்தையும் மாத்திடும். அந்த சம்பவத்துக்கு பிறகு, அவங்க முன்னாடி இருந்த மாதிரி இருக்கிறதில்ல. When responsibility comes too early.. ஒரே குடும்பத்தில்ல தீடீர்னு அப்பா இறந்துட்டாங்க வச்சுக்கோங்க. நேத்து வரைக்கும் அப்பாகிட்ட எல்லாமே கேட்ட பையன் இன்னைக்கு எதிர்காலத்தை பத்தி யோசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு வரலாம். "அம்மாவை எப்படி பாத்துக்க முடியும்?" "வீட்டுச்செலவு எப்படி?" "தம்பி, தங்கச்சி படிப்பு?" " நான் வேலைக்குப் போக வேண்டுமா?" ன்னு அவங்களுக்கு  நிறைய  எண்ணம்  வரலாம். அவனுக்கு அந்த responsibilityக்கு தயாராகும்  நேரம் கிடைத்திருக்காது. ஆனா வாழ்க்கை அவனுக்காக காத்திருக்காது. சில நேரங்களில் responsibility முதலில் வருகிறது; maturity அதற்குப் பிறகு வருகிறது . இது பசங்களுக்கும் மட்டும் இல்ல, பொன்னுங்களும் பொ...

மழையில் தொலைந்த மஞ்சள் குடை.. Yel(Love) Umbrella...

Image
                                                                                  மழை இரவு                                                                                      Chapter 7 மாலை 5.30 மணி. வானம் மீண்டும் கருமேகங்களால் மூடுச்சு. அலுவலகத்தில் இருந்த அர்ஜூன் , லேப்டாப் முடி வெளிய வந்தான். அவன் மொபைல் வைப்ரேட் ஆச்சு.  நந்தினி: "libraryல இருந்து வர லேட் ஆகிட்டு, மழை வர்ற மாதிரி இருக்குல". அர்ஜூன் அத படிச்சுட்டு அவனை அறியாம ஜன்னல் வழியா வானத்தை பாத்தான். "பாத்து போயிட்டு வா" ன்னு ரிப்ள...

மழையில் தொலைத்த மஞ்சள் குடை Yel(love) Umbrella..

Image
                                                              பழைய வாட்ச்                                                                           Chapter 6 ஒரு மாலை நேரம்.   Dream library ஜன்னல் வழியா மெதுவா காத்து உள்ள வந்தது. வழக்கத்துக்கு மாறா அன்னைக்கு  அங்க ரொம்ப அமைதியா இருந்தது. குழந்தைக்களும் சீக்கிரம் போயிட்டாங்க.  அர்ஜுன் ஒரு டேபிள் கிட்ட  இருந்து ஒரு புக்கை புரட்டிட்டு இருந்தான். அவனுக்கு எதிரே நந்தினி சில புக்கை அடுக்கிட்டு இருந்தா. திடீர்னு அவ பார்வை அர்ஜூனோட கை பக்கம் போச்சு. அதே பழைய வாட்ச். கருப்பு கலர் ஸ்டப் கிழிஞ்சு இருக்கு. கண்ணாடி கூட கொஞ்சம் உடைச்சுருக்கு. "அர்ஜூன்..." "ம்ஹம்" "உங்கிட்ட ஒன்னு கேக்கலாமா?" ...

மழையில் தொலைந்த மஞ்சள் குடை yel(love) umbrella

Image
                                                                 நட்பு.. .                                                                          Chapter 5 அ டுத்த சில நாட்களில், அர்ஜூனும் நந்தினியும் எதிர்பார்க்காத அளவுக்கு நெருக்கமாக ஆரம்பித்தனர். முதலில் அது சாதாரண உரையாடலாகத் தான் இருந்தது, ஒரு நாள் மாலை, அர்ஜூனின் மொபைலில் ஒரு புதிய notification வந்தது. Unknown Number: " நான் நந்தினி. உங்க number library register-ல இருந்தது. Book recommendation வேணும்!" அந்த மெசேஜைப் பார்த்தவுடன் அவன் அறியாமலே சிரித்தான். சில நொடிகள் என்ன பதில் அனுப்புவது என்று யோசித்துவிட்டு, "என்ன மாதிரி புத்தகம் படிக்க பிடிக்கும்?" என்று அனுப்பினான். சில வினாடிகளில்...

மழையில் தொலைந்த மஞ்சள் குடை.. Yel(love) umbrella..

Image
                                 தற்செயலான இரண்டாவது சந்திப்பு                                                                      CHAPTER 4 அ டுத்த இரண்டு நாட்களாக அர்ஜூனின் மனதில் ஒரு விசித்திரமான அமைதி இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு, அவன் யாரையோ நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். ஆனால், அதே   நேரத்தில், அவனுக்குள் ஒரு கேள்வியும் இருந்தது. " நந்தினியை மீண்டும் சந்திக்க முடியுமா?" அவளுடைய எண் இல்லை. சமூக வலைதளத்தில் தேடவும் தோன்றவில்லை. அவளைப் பற்றி தெரிந்தது ஒன்றே ஒன்று. அவள் DREAM LIBRARY  வேலை பாக்கிறாள். அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய அர்ஜூன், வழக்கத்திற்கு மாறாக பைக்கை நகரத்தின் பழைய பகுதியை  நோக்கித் திருப்பினான். "சும்மா அந்த வழியா போயிட்டு வரலாம்.." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான...