மழையில் தொலைந்த மஞ்சள் குடை yel(love) umbrella
நட்பு...
Chapter 5
அடுத்த சில நாட்களில், அர்ஜூனும் நந்தினியும் எதிர்பார்க்காத அளவுக்கு நெருக்கமாக ஆரம்பித்தனர்.
முதலில் அது சாதாரண உரையாடலாகத் தான் இருந்தது,
ஒரு நாள் மாலை, அர்ஜூனின் மொபைலில் ஒரு புதிய notification வந்தது.
Unknown Number: " நான் நந்தினி. உங்க number library register-ல இருந்தது. Book recommendation வேணும்!"
அந்த மெசேஜைப் பார்த்தவுடன் அவன் அறியாமலே சிரித்தான்.
சில நொடிகள் என்ன பதில் அனுப்புவது என்று யோசித்துவிட்டு,
"என்ன மாதிரி புத்தகம் படிக்க பிடிக்கும்?" என்று அனுப்பினான்.
சில வினாடிகளில் reply வந்தது.
"எல்லாமே பிடிக்கும். ஆனா happy ending stories ரொம்ப பிடிக்கும்".
அந்த ஒரு வரியைப் பார்த்து அர்ஜூன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
அவனுக்கு happy endings மீது நம்பிக்கை இல்ல.
ஆனால் நந்தினிக்கு இருந்தது.
அந்த வித்தியாசம் அவனை யோசிக்க வைத்தது.
அன்று இரவு அவர்கள் புத்தகங்களைப் பத்தி நீண்ட நேரம் பேசினார்கள்.
அடுத்த நாள்...
அவள் ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை அனுப்பினாள்.
"இத படிச்சிருக்கீங்களா?"
பிறகு ஒரு quote.
அதற்கு பிறகு ஒரு meme.
இப்படியாக மெதுவாக அவர்கள் உரையாடல் வளர்ந்தது.
சில நாட்களிலேயே , அர்ஜூன் காலை எழுந்ததும் மொபைலை பாத்தா, நந்தினி ஏதும் அனுப்பிருக்காளானு அவனுக்கே புதுசா இருந்துச்சு.
ஒரு மாலை, நந்தினி லைப்ரேரிக்கு வரச் சொன்னா,
அவன் அங்க போனப்போ, நந்தினி புக்கை அடுக்கி வைச்சுட்டு இருந்தா..
அவனை பாத்ததும் சிரிச்சா,
"Perfect timing! எனக்கு ஹெல்ப் பண்ணுனும்''..
"என்ன் ஹெல்ப்"?
"இந்த புக்கை எல்லாம் SEC-WISE அரேஜ் பண்ணனும்".
அர்ஜூன் சிரித்து விட்டு அடுக்க ஆரம்பிச்சான்.
அப்படியே சிரித்து பேசிட்டு இருந்தாங்க.
அப்போ அங்க ஒரு சின்ன பொண்னு வந்தாள், அவள் காலை கட்டிப் பிடிச்சுக்கிட்டா.
"அக்கா! நாளைக்கு நீங்க வருவீங்களா?"
"ஆமாடா தங்கம்" ன்னு சொல்லி முத்தம் கொடுத்தா.
அந்த பொன்னு சிரிச்சுட்டு ஒடிட்டு,
அத பாத்த அர்ஜூன் கேட்டான்.
"நீங்க அவங்களுக்கு ரொம்ப SPECIAL போல.
"எனக்கு அவங்க சிரிச்சா, அவ்வளவு பிடிக்கும். மனசு லேசான மாதிரி இருக்கும்."
அர்ஜூன் அமைதியா கேட்டுட்டு இருந்தான். அவனுக்கு மத்தவங்க சந்தோசக்காக யாரும் எதும் பண்ணா பிடிக்கும்.
வெளிய இருட்ட ஆரம்பிக்கு.
LIBRARY ய மூடிட்டு இரண்டு பேரும் வெளிய வந்தாங்க.
"தேங்கஸ்" என்றாள் நந்தினி.
"எதுக்கு?" னு அர்ஜூன் கேட்டா.
"எனக்கு help பண்ணதுக்கும் அப்பறம்.... friend ஆனதுக்கும்".
அந்த வார்த்தை அர்ஜூனை அமைதியாக்குச்சு.
அர்ஜூன் ரொம்ப வருசத்துக்கு அப்பறம் அந்த வார்த்தை கேட்டான்.
"Thanks" ன்னு அர்ஜூன் சொன்னான்.
எதுக்கு? நந்தினி கேட்டா,
"சொல்லனும் தோனுச்சு"
சிரித்து விட்டு நடந்தாங்க. அப்போ வீசுன காத்து ரொம்ப இதமா இருந்தது அவங்களுக்கு.
அவங்களுக்குள்ள மலர்ந்த இந்த நட்பு இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் காதலா மாற போகுது.
To be continued....

Comments