மழையில் தொலைத்த மஞ்சள் குடை Yel(love) Umbrella..
பழைய வாட்ச்
Chapter 6
ஒரு மாலை நேரம்.
Dream library ஜன்னல் வழியா மெதுவா காத்து உள்ள வந்தது. வழக்கத்துக்கு மாறா அன்னைக்கு அங்க ரொம்ப அமைதியா இருந்தது. குழந்தைக்களும் சீக்கிரம் போயிட்டாங்க.
அர்ஜுன் ஒரு டேபிள் கிட்ட இருந்து ஒரு புக்கை புரட்டிட்டு இருந்தான்.
அவனுக்கு எதிரே நந்தினி சில புக்கை அடுக்கிட்டு இருந்தா.
திடீர்னு அவ பார்வை அர்ஜூனோட கை பக்கம் போச்சு.
அதே பழைய வாட்ச்.
கருப்பு கலர் ஸ்டப் கிழிஞ்சு இருக்கு. கண்ணாடி கூட கொஞ்சம் உடைச்சுருக்கு.
"அர்ஜூன்..."
"ம்ஹம்"
"உங்கிட்ட ஒன்னு கேக்கலாமா?"
அவன் புக்கை மூடினான்.
"ம்ஹம்... கேளு"
"இந்த வாட்ச் ஏன் மாத்த மாட்டுக்க?"
அப்படி கேட்டதும் அர்ஜூன் முகமே மாருச்சு.
கொஞ்சம் நேரம் அவன் ஒன்னும் சொல்லல.
அதை கவனிச்ச நந்தினி உடனே,
"சாரி... பெர்சனல் இருந்தா பதில் சொல்ல வேண்டாம்." என்றாள்.
அர்ஜூன் அவளை பாத்தான்,
அப்பறம் அந்த வாட்ச் தடவினான்.
"இது ஒரு memory எனக்கு.."
"யாரோ special person கொடுத்ததா ? அதனால தான் கழத்த மாட்டுக்கீங்களா?"
அவன் தலையசைத்தான்.
"என் தம்பி".
நந்தினி அமைதியாகிட்டா.
"அவங்க இப்போ எங்க இருக்காங்க"?
கொஞ்சம் நேர அமைதியான அப்பறம் மெதுவா சொன்னான்.
"இல்ல... அவன் 5 வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டான்.."
அந்த வார்த்தை இன்னும் அந்த இடத்த கணத்த அமைதியாக்குச்சு.
" நா .. சாரி.... " மெதுவா சொன்னா நந்தினி.
அர்ஜூன் சிரிக்க நினைச்சான்.
ஆனா அந்த சிரிப்பு அவன் கண்களை தொடல.
"அவன் ரொம்ப jolly type. எப்பவும் சிரிச்சுட்டே இருப்பான்,"
"உங்களுக்கு ரொம்ப closeah?
"என் best friendஉம் அவன் தான்"
அவன் சில நொடிகள் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்.
மழை பெய்து முடிச்சதால அங்க ஈரமா இருந்துச்சு.
"அவன் போனதுக்குப் பிறகு... சில விசியங்கள் மாறிட்டு".
அவன் குரல் மெதுவா உடைஞ்சுச்சு.
நந்தினி ஒன்னும் பேசல..
சில நேரங்களில் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேவையில்ல என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
அமைதியா அவனருகில் வந்து அமர்ந்தான்.
" ரொம்ப miss பண்ணுறீங்கணு தெரியுது".
அர்ஜூன் சிரிச்சான்.
"சில பேர மறக்க முடியாது."
"அதான் அந்த வாட்ச்?"
"ஆமா.. இது அவன் gift. இதை மாத்த மனசு வரல."
நந்தினி அந்த வாட்ச் சில நிமிசம் பாத்தா.
"நினைவுகளை மறக்கனும் அவசியமில்ல".
அர்ஜூன் அவளை பாத்தான்.
"ஆனா அந்த நினைவுகளோட சந்தோசமா வாழ கத்துக்கனும்".
அந்த வார்த்தைகள் அவ மனசுல எங்கோ ஆழமா பதிந்திச்சு.
பல வருசமா யாரும் அவங்கிட்ட இப்படி சொல்லல.
அவன் மெதுவா சிரிச்சா,
" நீ எப்பவுமே இப்படி தான் பேசுவியா"?
நந்தினி சிரிச்சா.
"இல்ல... சில பேர் கிட்ட மட்டும்"..
"அப்படியா?"
"ஆமாம்."
இரண்டு பேரும் அமைதியா பாத்துக்கிட்டாங்க..
வெளிய குளிர்ந்த காத்து வீசுச்சு.
அந்த மாலை, நந்தினி முதல் முறையா அர்ஜூனின் மனதில் இருக்கும் வலியை பாத்தாள்.
அதே நேரம்..
அர்ஜூனும் முதல் முறையா, யாரோ ஒருத்தரிடம் தனது கடந்த காலத்தை பகிர்ந்திருக்கான்.
அவனுக்குத் தெரியல..
இந்த சின்ன உரையாடல், அவர்களுக்கு உள்ள தூரத்தை குறைக்க போகுதுனு..
To be continued...

Comments