மழையில் தொலைந்த மஞ்சள் குடை.. Yel(Love) Umbrella...

                                                                 மழை இரவு

                                                                    Chapter 7

மாலை 5.30 மணி.

வானம் மீண்டும் கருமேகங்களால் மூடுச்சு. அலுவலகத்தில் இருந்த அர்ஜூன் , லேப்டாப் முடி வெளிய வந்தான். அவன் மொபைல் வைப்ரேட் ஆச்சு. 

நந்தினி: "libraryல இருந்து வர லேட் ஆகிட்டு, மழை வர்ற மாதிரி இருக்குல".

அர்ஜூன் அத படிச்சுட்டு அவனை அறியாம ஜன்னல் வழியா வானத்தை பாத்தான்.

"பாத்து போயிட்டு வா" ன்னு ரிப்ளே பண்ணான்.

அதுக்கு நந்தினி சிரிக்கும் emoji அனுப்பினாள்.

அவனும் பைக்கை எடுத்துட்டு கிளம்பினான்.

சில நிமிசத்துல சட சடன்னு மழை தூற ஆரம்பிச்சுட்டு.

ரோட்டுல போனங்க எல்லாம் பக்கத்துல இருந்த இடத்துல ஒதுங்குனாங்க.

அர்ஜூனும் ஒரு பழைய பஸ் ஸ்டாப்ல பைக்கை நிறுத்தினான்.

ஹெல்மெட்டை கழத்திட்டு, மழைய பாத்துட்டு நின்னான்.

அப்போ ஒரு பழக்கமான குரல் கேட்டுச்சு..

"இன்னைக்கு  நம்மள இந்த மழை பாக்க வைச்சுட்டு போல".

திரும்பி பாத்தான் அர்ஜூன்.

நந்தினி நின்னுட்டு இருந்தா..

அவ முக்கால்வாசி நனைச்சுட்டா போல , கைல எப்பவும் போல இரண்டு புக் இருந்தது.

" நீயா?" ன்னு ஆச்சரியமா கேட்டா அர்ஜூன்.

"ஆமா, LIBRARYல இருந்து கிளம்பினே. மழை விட்டுடும் நினைச்சுட்டு வந்தேன். ம்ம்... நனைச்சுட்டேன். ஆனா இன்னும் அதிகமா தான் பெய்யுது".

இரண்டு பேரும் பஸ் ஸ்டாப் ஓரத்தில் நின்னுட்டு இருந்தாங்க.

 அப்பறம் கொஞ்ச நேரம் ஒன்னும் பேசல..

மழை சத்தம் மட்டும் கேட்குது.

"எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்".

அர்ஜூன் மெதுவா சிரிச்சான்.



"ம்ம்... ஏன்?"

 " மழை வந்தா உலகமே கொஞ்ச நேரம் அமைதியாகிடும். இந்த பரப்பரப்பு இல்லாம இருப்பாங்கல கொஞ்ச நேரம்.."

"ம்ம்ம்... எனக்கு அவ்வளவா பிடிக்காது" ன்னு வெளிய பாத்துட்டே சொன்னான்.

"ஏன்?"

அப்போ அவன் முகம் கொஞ்சம் மாறுச்சு. கொஞ்சம் நேரம் ஒன்னும் பேசல.

மூச்ச ஆழமா இழுத்து விட்டான்.

"இப்படி தான் ஒரு நாள், மழைல"

நந்தினி அமைதியா பாத்தா.

"என் தம்பி ஆதி.... அவன் அந்...த நாள்ல தான் என்னை விட்டு போனான்."

"என்னை விட 5 வயசு சின்னவன்". அவன் இல்லாம இப்போ எங்க வீடு... வீடு மாதிரி இல்ல".

ஒரு நாள், நாங்க வெளிய போனோம்."

"அதுக்கு அப்பறம்..."

".... ஒரு Accident."

நந்தினி இதயம் படபடப்பா இருந்துச்சு.

"ஆதி..."

"திரும்பி வரல." 

மழை இன்னும் விடல.

அர்ஜூன் கை இறுக்கமாச்சு.

"அந்த விபத்துல.."

அவன் சொல்லும் போதே குரல் உடைச்சுது.

"..ஒரு ஆள் இருந்தான். அவரு சரியான வந்துருந்தா.."

"இப்போ என் தம்பி உயிரோட இருப்பான்".

அவன் குரலில் இருந்த கோவம் நந்தினி புதுசா இருந்துச்சு. 

"அவரை நான் ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்".

"அவரோட முகம் இன்னைக்கும் என் மனசுல இருக்கு."

நந்தினி மெதுவா கேட்டா.

"அவ..ருக்கு என்னாச்சு?"

"தெரியல."

"ஆனா... அவரால தான் என் தம்பிய நா இழந்தேன்.."

நந்தினிக்கு என்ன சொல்ல தெரியல..

"அர்ஜூன்.."

"எல்லா விசியமும் நாம நினைக்கிற மாதிரி இருக்காது.."

அவன் அவள பாத்தான்.

"ஒரு நாள்...."

"உண்மை வேற மாதிரி இருந்தா?"

அர்ஜுன் கசப்பா சிரிச்சா..

"ம்ஹீம்... அப்படி ஒரு நாள் வராது."

"என் மனசு சொல்லறது தப்பா இருக்காது."

நந்தினி மெதுவா சிரிச்சா..

"சில  நேரம் மனசு கூட நம்மள ஏமாத்திடும்.."

மழை குறைச்சுட்டு..

இரண்டு பேரும் வெளிய வந்தாங்க..

பைக்ல ஏறத்துக்கு முன்னாடி அர்ஜூன் சொன்னான்.

"தேங்கஸ்"

"எதுக்கு?"

"நா சொன்னத அமைதியா கேட்டதுக்கு..

"அது தான் friends".

அந்த வார்த்தை அவன் மனச லேசாக்குச்சு.

ஆனா...

அவனுக்கு தெரியல..

அவன் வெறுக்கிற அந்த ஆள் ... நந்தினியுடைய அப்பான்னு.

அப்பறம், அவன் நினைச்ச மாதிரி அவர் குற்றவாளி இல்லன்னு அவனுக்கு தெரியல...


To be continued....







Comments

Popular posts from this blog

மீ டைம்

பெண்ணின் பூரணத்துவம் ....

என்னவன்