Posts

Showing posts from June, 2026

மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella..

Image
                                                                                  Chapter 2 மழை இன்னும் நிற்கவில்லை. சாலையோரத்தில் நின்றபடி, கையில் இருந்த புத்தகத்தை அர்ஜூன் திரும்ப ஒருமுறை பார்த்தான்.  அதன் அட்டையில் மழைத்துளி ஒட்டி இருந்தன. அவன் விரல்களால் அதை மெதுவாக துடைத்தான். பிறகு முதல் பக்கத்தை திறந்தான். அதில் அழகான கையெழுத்தில் ஒரு பெயர். " நந்தினி " அந்த பெயரை அவன் மெதுவாக மனசுக்குள்ள உச்சரித்துப் பாத்தான். " நந்தினி"... ஏனோ அந்த பெயர் அவன் மனசுல ஒரு விசித்திரமான அமைதிய கொடுத்தது. யார் அவள்? எங்க இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? எதுவுமே தெரியாது. ஆனால் அவளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவன் மனசுல ஆழமா தோன்றிட்டு. அவன் புத்தகத்தை பத்திரமா மூடி விட்டு பைக்கில் ஏறினான். வீட்டிற்கு வந்த பிறகும் அந்த புத்தகம் அவன் மேசையிலேயே இருந்தது. அன்று இரவு தூங்...

மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella..

Image
            மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella..                                                                    Chapter 1 மாலை 5 மணி  வானம் முழுக்க கருமேகம் சூழ்ந்திருந்தது. மதியத்துல இருந்து சூரியன் முகம் காட்டல . சாலையோர மரங்கள் காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டுற மாதரி இருந்தது.  அர்ஜுன் தனது R15 பைக் ஒட்டிட்டு போயிட்டு இருந்தான்.   அவனுக்கு வேகமா ஒட்டுறது பிடிக்காது. ஆனா இன்னைக்கு அவன் மனசு அமைதியா இல்லை. ஹெல்மெட்டுக்குள் மறைச்சிருக்கிற முகம் வெளியில் அமைதியா இருக்கலாம். ஆனா  உள்ளுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி  கணமா இருந்தது. அவன் உடனே கைய பாத்தான். அந்த வாட்ச் அவனுக்கு பல நினைவுகளை கொண்டு வந்தது. அது சாதாரண வாட்ச் இல்லை. ஒவ்வொரு முறையும் அந்த வாட்ச் பாக்கும் போது அவனுக்கு ஒரு குற்ற உணர்வு, ஒரு வெறுமை எல்லாம்...