மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella..

            மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella.. 

                                                                  Chapter 1

மாலை 5 மணி 

வானம் முழுக்க கருமேகம் சூழ்ந்திருந்தது. மதியத்துல இருந்து சூரியன் முகம் காட்டல . சாலையோர மரங்கள் காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டுற மாதரி இருந்தது. 


அர்ஜுன் தனது R15 பைக் ஒட்டிட்டு போயிட்டு இருந்தான்.  

அவனுக்கு வேகமா ஒட்டுறது பிடிக்காது. ஆனா இன்னைக்கு அவன் மனசு அமைதியா இல்லை. ஹெல்மெட்டுக்குள் மறைச்சிருக்கிற முகம் வெளியில் அமைதியா இருக்கலாம். ஆனா  உள்ளுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி  கணமா இருந்தது.

அவன் உடனே கைய பாத்தான். அந்த வாட்ச் அவனுக்கு பல நினைவுகளை கொண்டு வந்தது.

அது சாதாரண வாட்ச் இல்லை.

ஒவ்வொரு முறையும் அந்த வாட்ச் பாக்கும் போது அவனுக்கு ஒரு குற்ற உணர்வு, ஒரு வெறுமை எல்லாம் வரும்..

அந்த நினைவை தள்ளி வைச்சுட்டு சாலையில் கவனம் பதிக்கிறான்.

அப்போ முதல் மழைத்துளி அவன் பைக் கண்ணாடி மீது விழுந்தது.

அதை தொடர்ந்து இன்னொரு துளி..

சில நொடிகளில் மழை பலமா பெய்கிறது.

 காத்து ரொம்ப வீசுது.

அப்போ தான் அவன் அவளை பாக்கிறான்.  ROADல இன்னோரு பக்கம் ஒரு மஞ்சள் நிற குடை பிடிச்சுட்டு நடந்து வந்திட்டு இருக்கிறாள் ஒரு பெண். 

கைல சில புத்தகம்..

காற்றோட  தாளத்துக்கு ஏற்ற மாதிரி அசைகிற அவள் முடி. மழை பெய்தாலும் பதற்றம் இல்லை அவள் முகத்துல.  அந்த காட்சி ஏனோ அர்ஜூன் மனசுல சில நொடி அப்படியே நிறுத்துச்சு.

தீடீரென்று  காற்று வேகமா அடித்தது. அவள் கைல இருந்த மஞ்சள் குடை பறக்குது.. 

அதே நேரம் அவள் புத்தகமும் கீழே விழுது.

ஒரு  நொடி தான், ஆனா அவள் அந்த குடைய பிடிக்கல. புத்தகத்த எடுக்க போகிறாள். அவள் மழைல நனைச்சாலும் பரவாயில்லனு அதை மார்போடு அணைத்து கொள்கிறாள். 

அதை பார்த்த அர்ஜூன் அவனை அறியாமலே சிரிச்சான்.

அப்போ அர்ஜுன் மனசுக்குள்ள:

"இந்த காலத்துல பொருளை விட கனவுகளை காப்பாத்துறவங்க இன்னும் இருக்காங்களா..."

 அப்படின்னு நினைக்கிறான்.

ஆனால் தயங்கினான். சில நொடிகளில் அவளை கடந்து போயிட்டான்.

கொஞ்ச தூரம் போன அப்பறம், அவன் மனசாட்சி கேட்டது.

"ஏன் நிற்கல?" ன்னு..

உடனே பைக் திருப்பினான்.  மீண்டும் அந்த இடத்திற்கு வந்தான்.

ஆனால், அவள் அங்கே இல்லை.

ரோட்டுயோரத்தில் நனைத்தப்படி கிடைந்தது ஒரு புத்தகம் மட்டும்.

அவன் அதை எடுத்தான். முதல் பக்கத்தை திறந்தான்.

அதில் ஒரு பெயர்.

 நந்தினி...


அதோடு ஒரு சிறிய காகிதம்.

"Dream Library Volunteer"

அந்த பெயர் அவன் வாழ்க்கையை மாற்ற போகிறது அப்போ அவனுக்கு தெரியாது...

  

To be continued...💫





Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

பெண்ணின் பூரணத்துவம் ....