மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella..

                                                     


                           Chapter 2


மழை இன்னும் நிற்கவில்லை.

சாலையோரத்தில் நின்றபடி, கையில் இருந்த புத்தகத்தை அர்ஜூன் திரும்ப ஒருமுறை பார்த்தான்.  அதன் அட்டையில் மழைத்துளி ஒட்டி இருந்தன. அவன் விரல்களால் அதை மெதுவாக துடைத்தான்.

பிறகு முதல் பக்கத்தை திறந்தான்.

அதில் அழகான கையெழுத்தில் ஒரு பெயர்.

" நந்தினி "

அந்த பெயரை அவன் மெதுவாக மனசுக்குள்ள உச்சரித்துப் பாத்தான்.

" நந்தினி"...

ஏனோ அந்த பெயர் அவன் மனசுல ஒரு விசித்திரமான அமைதிய கொடுத்தது.

யார் அவள்?

எங்க இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? எதுவுமே தெரியாது.

ஆனால் அவளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவன் மனசுல ஆழமா தோன்றிட்டு.

அவன் புத்தகத்தை பத்திரமா மூடி விட்டு பைக்கில் ஏறினான். வீட்டிற்கு வந்த பிறகும் அந்த புத்தகம் அவன் மேசையிலேயே இருந்தது.

அன்று இரவு தூங்க போனான். ஆனால், அவன் கண் முன் மீண்டும் மீண்டும் அந்த மழை நாளின் காட்சி ஒடுது.

காற்றில் பறந்த மஞ்சள் குடை.

அந்த பெண் புத்தகத்தை மழையில் நனையாம காப்பாத்த முயன்றது எல்லாம் திரும்ப திரும்ப வருகிறது.

அவளுடைய கண்கள்,

அவளுடைய முகம்,

அவனுக்கு எரிச்சலா இருந்தது ஏனென்றால், யாரோ தெரியாத பெண்ணை பற்றி யோசிப்பது அவனுடைய இயல்பு இல்லை.

அடுத்த நாள், காலைல வேலைக்கு போன அப்புறமும் அவன் கவனம் சிதறுகிறது.

மதிய உணவு  நேரத்தில் கூட அவன் மேசை டிராயரில் வைச்சிருந்த புத்தகத்தை எடுத்து பார்த்தான்.

அதன் உள்ளே ஏதாவது முகவரி இல்லை மொபைல் நம்பர் இருக்கிறதானு பார்த்தான்.

ஒரு சின்ன காகிதம் கீழே விழுந்தது.

அதை எடுத்துப் பார்த்தான்..

அதில் ஒரு முத்திரை.

"Dream Library - Volunteer Program"

எழுதியிருந்தது.

அர்ஜூன் முகத்தில் சின்ன சிரிப்பு. 

"சரி ... ஒரு க்ளூ கிடைச்சுருக்கு"

அன்னைக்கு மாலை வேலை முடிஞ்சதும் அந்த பெயரை இணையத்தில் போட்டான்.

பல இடங்கள் வந்தன.

ஆனால், அவன் தேடுன பெயரில் சின்ன நூலகம் மட்டும் இருந்தது.

நாளைக்கு போயி பாக்கலாம்னு முடிவு பண்ணுகிறான்.

" நான் ஏன் இவ்வளவு முயற்சி பண்ணுறேன்?"

"புத்தகத்தை கொடுக்கிறதுக்காகவா"?

இல்ல....

அவளை திரும்ப பார்க்கிறதுக்கா?

அந்த கேள்விக்கு அவங்கிட்ட பதில் இல்ல.

அடுத்த நாள் மாலை.

வேலை முடிந்தது.

புத்தகத்தை பையில் வைத்து கொண்டு அர்ஜூன் பைக்கில் கிளம்பினான்.

அந்த நகரத்தின் பழைய பகுதியிலிருந்த அந்த சின்ன நூலகத்துக்கு போகிறான்.

அவனுக்குத் தெரியாது.

அந்த நூலகத்தின் கதவை திறக்கும் அந்த  நொடி....

அவன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொடங்கப் போகிறது என்று.


To be continued..💫







Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

பெண்ணின் பூரணத்துவம் ....