மழையில் தொலைந்த மஞ்சள் குடை Yel(love) Umbrella
நூலகத்தில் தொடங்கிய ஒரு புதிய அத்தியாயம்..
Chapter 3
மாலை 6 மணி..
வேலை முடிஞ்சதும் அர்ஜூன் நேரா தன்னோட R15 பைக்கை பழைய நகரப் பகுதியை நோக்கி செலுத்தினான். அவன் மனதில் இருந்த ஒரே எண்ணம் -
" DREAM LIBRARY ".
அந்த புத்தகத்தில் கிடைத்த சிறிய தடயம் தான் இப்போ அவனுக்கு கிடைச்ச ஒரே வழிகாட்டி.
சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு மரங்கள் சூழ்ந்த அமைதியான தெருவில் ஒரு சிறிய கட்டிடம் அவன் கண்களில் பட்டது. பழைய செங்கல் சுவர், நீல நிற கதவு, அதன் மேல வெள்ளை பலகையில் எளிமையாக எழுதப்பட்டது.
" DREAM LIBRARY "
அந்த இடத்தை பாத்ததும் அர்ஜூனின் மனம் ஏனோ அமைதியாச்சு.
பைக்கை நிறுத்தி விட்டு , பையில் இருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
உள்ளே பழைய புத்தகங்களின் மனம். சுவர்களில் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள். ஒரு முலையில் சிறுவர்கள் சிலர் அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தனர்.
அந்த அமைதியை உடைத்தது ஒரு அமைதியா இனிமையான பெண் குரல்.
"ஒரு நல்ல புத்தகம் நமக்கு நண்பன் மாதிரி.. அது நம்மை ஒரு போதும் தனியா விடாது,"
ஆந்த குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய அர்ஜூனின் கண்கள் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டன.
அவள்தான்.
அதே மஞ்சள் குடையில் மழையில் பார்த்த பெண்.
இன்று வெள்ளை நிற சல்வார் அணிந்திருந்தாள். முடியை பின்னியிருந்தாள். முகத்தில் அதே அமைதியான சிரிப்பு.
அவள் சில குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்தக் காட்சியைப் பார்த்த அர்ஜூனுக்கு அவளை உடனே அழைக்கத் தோன்றவில்லை.
அவள் பேசும் விதத்தையும், குழந்தைகள் அவளை ரசித்து சிரிக்கும் விதத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்ட நின்றான்.
சில நிமிடங்களிம் கதை முடிந்தது.
குழந்தைகள் கைத்தட்டி மகிழ்ந்தனர்.
அவர்களைக் அனுப்பிவிட்டு, மேசையில் புத்தகங்களை அடுக்கிக் ஹொண்டிருந்தாள் நந்தினி.
அர்ஜூன் மெதுவாக அவளிடம் சென்றான்.
" Excuse me..."
அவள் திரும்பிப் பார்த்தாள்.
ஒரு நொடி யார் என்று புரியாமல் பார்த்தாள்.
"ஆங்.. சொல்லுங்க."
அர்ஜூன் பையில் இருந்த புத்தகத்தை நீட்டினாள்.
"இது .... உங்களோட புக்கா?
புக்கை பார்த்தும் அவளது முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.
"ஐயோ! இத தான் நா ஒரு வாரமா தேடிட்டு இருந்தேன்".
அவள் புக்கை வாங்கி, அன்பா அதனோட அட்டைய வருடினாள்.
"எங்க கிடைச்சது?"
"ஒரு நாள் மழைல... அந்த ரோட்டு பக்கம்..."
நந்தினி ஒரு நிமிசம் அமைதியானா..
அப்பறம் சிரிச்சா,
" அப்போ .... நீங்க தான் அந்த பைக்கில் போனீங்க?"
அர்ஜூன் கொஞ்சம் தயக்கத்தோட சிரிச்சான்.
"ஆமாம்.... நா திரும்ப வந்தேன். ஆனா நீங்க அப்போ அங்க இல்லை".
"என் friend வந்து கூட்டிட்டு போனா . புக் காணாம போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்."
அவளது குரலில் இருந்த உண்மையான மகிழ்ச்சி அர்ஜூனுக்கு புசுசா இருந்துச்சு.
"ரொம்ப நன்றி."
"பரவாயில்லை".
"ஒரு நிமிசம்..."
அவள் உள்ளே போயி 2 சூடான கப் காபியுடன் திரும்பி வந்தா.
"இந்த உதவிக்காக ஒரு காபி குடிக்கனும். வேண்டாம்னு சொல்லாதீங்க".
அர்ஜூன் முதலில் தயங்கினான்.
ஆனால் அவளது புன்னகையைப் பார்த்த பின், "சரி..." சொல்லிட்டு அமைதியாக உட்கார்ந்தான்.
அவங்க முதல்முறையாக ஒருவர் ஒருவர் பற்றி பேச ஆரம்பிச்சாங்க.
பெயர்.
வேலை
புத்தகம்.
வாழ்க்கை.
சாதாரணமா இருக்கு, ஆனா அவங்களுக்குள்ள ஒரு bond உருவானது.
காபி குடிச்சு முடிச்சுட்டு அர்ஜூன் கிளம்ப எழுந்திருக்கிறான்.
"நா வரேங்க".
'சரி... அப்புறம் பார்ப்போம்."
அந்த ஒரு வார்த்தை அர்ஜூனோட மனசுல ஏதோ பண்ணுச்சு.
library விட்டு வெளிய வந்த அப்பறம், மாலை சூரியன் மேகங்களுக்கு இடையில் இருந்து மெதுவா வெளிச்சம் வீசிக் கொண்டிருந்தான்.
பைக்கில் உட்காரும் போது அவனை அறியாமலே சிரிக்கிறான்.
பல வருசங்களுக்கு அப்பறம்...
அவன் மனசுல ஒரு புது ஆரம்பம்...
To be continued..💫

Comments