டயரி குறிப்புகள்

 

     அம்மாவும் ,மகனும்



சிறு வயதில் சனி,  ஞாயிறு லீவு முடிந்து திங்கள் ஸ்கூல் திறக்கும் நாள். 

 காலையிலையே "அம்மா... இன்னைக்கு ஸ்கூல் போனும் மா"... என்று ஒரு விதமான ஏக்கத்தோடு கண்ணீர் தளும்ப கேட்டான்.

அப்பொழுது அவன் என்  நெஞ்சின் அருகில், கையின் அருகாமையில்.



22 வருடம் கழித்து....

ஞாயிறு இரவு போன் செய்து "ம்மா... காலையில் ஆபீஸ் போகனும்" சொல்றான். ஆனால் அவன்  பல மையில் அப்பால் எங்கோ தொலைவில்.....

 இப்பொழுது என் கண்களில் கண்ணீர் தளும்புகிறது, குரல் தடுமாறுகிறது, சமாளித்து கொண்டு சிரித்து கொண்டே சொன்னேன் அன்று போல, "உனக்கு என்னப்பா?உன்னை வெல்ல யார் இருக்கார்? தைரியமாக போய் வா என்று....." 




Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

பெண்ணின் பூரணத்துவம் ....