குறிக்கோள்.
மதியம்நித்ராதேவி சுத்தி இருக்கிற மரம் முலமா சிலுசிலுன்னு காத்து கொடுத்து, மாணவர்களை தழுவ முயற்சித்து கொண்டு இருந்தது.
இளங்கலை மேலாண்மை மூன்றாம் ஆண்டு:
மதியம் 2 மணி,
கடைசி வகுப்பு ஆசிரியர் குழு முறை கலந்துரையாடக்காக மாணவ மாணவியருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அது, கடைசி வகுப்பு என்பதால் ஆசிரியர் மாணவர்களை உற்சாகப்படுத்த, "என்னென்ன டாபிக் பேசனும் நினைக்கிறீர்களோ?
பேசலாம். யாரு பஸ்ட் வந்து பேசப் போறாங்க பார்ப்போம்"? என்றார்.
சில மாணவமணிகள் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து கொண்டு இருந்தனர். சிலர் என்ன தலைப்பு கொடுத்து பேசலாம் தீவிரமாக யோசிச்சுகிட்டு இருந்தனர்.
பேசத் துவங்கினர் சிலர். நன்றாக பேசினர்; கைதட்டும் வாங்கினர்.
அடுத்த முறை நக்ஷத்ரா கம்பீரமாக முன் சென்றாள். படிப்பில் சுமாராக மதிப்பெண் வாங்குபவள். அனைவரும் இவள் என்னத்த பேச போறா என்பதுபோல் இருந்தனர்.
நா பேச போற டாபிக் குறிக்கோள் (ambition).
(சில மாணவர்கள் தங்களுக்குள் "சுத்தம் "என்று முணுமுணுத்துக் கொண்டனர்.)
அவர்கள் முணுமுணுப்பை கேட்டாலும் சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.
நம்ம காலேஜ்ல சேர வந்த அன்னைக்கு ஏதாவது ஒரு குறிக்கோளோடு தான் வந்து இருப்போம்.ஆனா இன்னிக்கு அந்த குறிக்கோளை நோக்கி நம்ம போகிறோமா கேட்டா கண்டிப்பா இல்ல, சில பேரை தவிர.
கல்லூரி வாழ்க்கை என்கிறது வாழ்க்கையோட அடிப்படை விஷயங்களையும் சேர்த்து நமக்கு சொல்லித் தர இடம். என்னடா இப்ப திடீர்னு தத்துவமா பேசுகிறா, திடீர்னு இந்த ஞானம் எங்கிருந்து வருது நினைக்கிறீங்களா?🤔🤔
ஆமா !எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா ஒருநாள் ,என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அவங்க இதே கல்லூரியில் தான் படிச்சாங்க. நல்லா படிப்பாங்க. நம்ம டிபார்ட்மெண்ட்க்கே ரொம்ப பிடிக்கும். புத்திக்கூர்மையும் உண்டு. ஆனால் அவ்வளவு படிச்சவங்க இப்ப என்ன பண்றாங்கன்னா ஒரு ஹவுஸ் வைப் இருக்காங்க. ஹவுஸ்வைஃப் ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை. ஆனா அவங்களோட தனித்தன்மை அவங்க இழந்துவிட்டேன் அப்படின்னு அவங்களே சொன்னாங்க. (ஆமா, இது புலம்பல... இல்லை, இல்லை மனவருத்தத்தை நம்ம அம்மாகிட்ட கேட்டிருப்போம்). 😭😭
அந்தக் அக்கா படிக்கும்போது அவங்க சொன்னது "ஒரு பெரிய கம்பெனியில பெரிய போஸ்ட்ல நான் இருப்பேன். ரொம்ப கம்பீரமா சொன்னாங்க" அதை நானே கேட்டு இருக்கேன்.
அந்த அக்கா, " நான் காலேஜ்ல படிப்பை மட்டும் தான் பார்த்தேன்📚. வாழ்க்கையை படிக்க மறந்துட்டேன்😭. கடைசி பெஞ்ச்ல உள்ளவங்கல எல்லாம் "இவன் எல்லாம் என்ன செய்ய போறான்" நினைச்சிருக்கேன். ஆனா இப்போ என் கூட படிச்ச அரியர் வாங்கின பையன், பொண்ணுங்க எல்லாம் பெரிய போஸ்டிங்-ல இருக்காங்க. நினைக்கும்போது ஒரு பக்கம் பெருமை, ஒரு பக்கம் பொறாமையாகவும் இருக்கு. எவ்வளவு பெரிய மார்க் வாங்கி என்ன?
காலேஜ்ல ஃபர்ஸ்ட் சொன்ன, அன்னைக்கு தான் என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க. ஆறே மாசத்துல கல்யாணம் முடிஞ்சு என்னோட டிகிரி சர்டிபிகேட் கூட வாங்க நான் வரல. விரக்தியா சொன்னாங்க".
நம்மள நிறைய பெரும் அப்படித்தான் இருக்கிறோம். நம்ம எதுக்காக இங்க வந்தோம்; நம்மளோட குறிக்கோளை என்ன? அது நோக்கிய பயணம் எல்லாம் மறந்துட்டு ஜாலியா பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோம். ஜாலியா இருக்கிறதும் தப்பில்லை. ஆனா, நம்ம குறிக்கோளை மறந்து விடக்கூடாது. எவ்வளவு தடைகள் வந்தாலும் நம்ம எதற்காக வந்தோம்கிற நோக்கத்தை விட்ற கூடாது. இங்க நல்ல மார்க் எடுத்ததோட சரி,ஜெயிச்சுடோம் நினைக்கிறோம் . அந்த அக்காவும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாததுக்கு காரணம் கல்யாணம் இல்ல. அந்த அக்காவோட மனசுல குறிக்கோளை அடையனும் என்கிற வெறி இல்லை. அப்படி இருந்திருந்தால் கல்யாணம் கூட அதற்கு தடையா இருந்திருக்காது.
நம்ம சமூகம் என்னைக்குமே பெண்கள் ஆதரித்ததில்லை. இங்க முட்டி முட்டி மோதி தான் ஜெயிச்சிருக்காங்க பெண்கள் பலர். நம்ம மனசு முடியாது நினைத்தால் மட்டும்தான் அது தடையாகும்.
"ஒரு விஷயத்துக்காக ஆசைப்பட்டால் மட்டும் போதாது; அதுக்காக அடம்பிடிக்கும் செய்யணும்" அப்படின்னு ஒரு படத்தில் வரும் ஒரு டயலாக் வரும். அத மனசுல ஆழமா பதிஞ்சு வச்சுக்கோங்க.
முக்கியமா ஒரு பெண்ணா நம்ம தனித்தன்மையோட; பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமா இருக்கணும். அப்பதான் நம்ம மனசு நிறைவடையும். பொண்ணா நிறைய பொறுப்புகள் இருக்கு அதை நிறைவா செய்யனும்னா நம்ம மனசு நிறைவடையும்.
"வாழ்க்கையை படிங்க;
குறிக்கோளை அடைவதற்கு".
நன்றி!
என்று சொன்ன நக்ஷத்ரா அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
Comments