தேடி கிடைத்த புத்தகம் ❤️

 

எனக்கு படிக்குறதுனா கொள்ள ஆசை...
அதுவும் எனக்கு புடிச்ச மாதிரி கதை எல்லாம் கேட்கவே வேண்டாம்...
அப்படி நான் படிக்கணும் படிக்கணும் நெனச்ச புத்தகம் "பொன்னியின் செல்வன்"

காலேஜ் படிக்கும் போதுல இருந்து நினைத்தேன்..
பட் வாங்க முடியல...
ஆன்லைன்ல கதை இருக்கு. பட் புக்கை எடுத்து வாசிக்கிறது திருப்தி அதுல எனக்கு இல்லை... சில கதைகள் புத்தகமாக வாசித்தால் மட்டுமே நன்றாக இருக்கும்.

நாட்கள் உருண்டோடி இப்பொழுது
கல்யாணம் முடிஞ்சு 10 வருஷமும் ஆயிடுச்சு..

ஒரு நாள் மதுரை போயிருந்தோம். அங்கே ஒரு கடையின் முன்னாடி இந்த புத்தகம்.. அதுவும் 5 பாகம் ஒன்று சேர்ந்து..

என் கணவனிடம் கேட்டு புத்தகத்தை வாங்கி விட்டேன்.
புத்தகம் கையில் கிடைத்ததும் அவ்வளவு சந்தோஷம் என் குழந்தைய தூக்கிற மாதிரி....



இதைவிட சிறப்பு என்னன்னா புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாத என் கணவர்;என் சின்ன சின்ன ஆசைக்காக நான் செய்யும் செயலுக்கு தடை போடாமல் இருக்கும் குணம்;நான் தேடாமல் கிடைத்த பொக்கிஷத்திற்கு சமம்.....


வாழ்க்கையில் நாம் தேடாமல் கிடைத்த பொக்கிஷங்களாகிய உறவுகளை, நட்புகளை என்றும் மறக்காதீர்!   அவர்கள் உணர்வுகளை மிதிக்காதீர்கள்!

Happy friendship day 🎇 to all my friends.💞


Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)