மர்மம் 😀 ( funny Scary story)

 மர்மம்...😄

உங்களுக்கு இந்த கதை  தெரியுமா தெரியல.ஆனா நான் சின்ன வயசுல ரொம்ப ரசிச்ச கதை இது. (பயங்கரமான கதை😄)

என்னை விட சின்ன பசங்க கிட்ட எல்லாம் இந்த கதையை சொல்லும்போது செம ஜாலியா இருக்கும்.

வாங்க அந்த கதைக்குள் போய் நாம் ரசிக்கலாம்..

(முக்கியமான விஷயம் இந்த கதை சொல்லும் போது ரொம்ப அமைதியான வாய்ஸ் ல  சொல்லணும்...)

ஒரு ஊர்ல ஒரு பாட்டியும் பேரனும் இருந்தாங்க.
பாட்டி சொல்லுற எந்த ஒரு விஷயத்தையும் பேரன் கேக்கவே மாட்டான்...

பேரன் ரொம்ப ஊதாரித்தனமாக இருந்தான். பாட்டிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு. 

பாட்டிக்கிட்ட ஒரு மோதிரம் இருந்துச்சு. அதை  கேட்டுட்டே இருந்தான் பேரன். பாட்டி கொடுக்கவே இல்லை...

ஒரு நாள் பாட்டி இறந்துட்டாங்க. அவங்களுடைய இறுதிச்சடங்கு  நடந்துச்சு. பேரன் பாட்டியை புதைத்த அப்புறமா அந்த இடத்துக்கு போயி பாட்டியோட கையில் இருந்து மோதிரத்த கழற்றினான்.

மோதிரம் எடுக்கவே முடியல.

"கிழவி மண்டைய போட்டும் நம்மள பாடா படுத்துது"  நெனச்சுட்டு ஒரு சின்ன கத்திய வச்சு பாட்டியோட விரலை வெட்டி எடுத்துட்டான்.

மோதிரத்தை பார்த்ததும் அவனுக்குள் அவ்ளோ சந்தோஷம்...

கொஞ்சநாள் ஆனதுக்கப்புறம் அவனுக்கு கனவுல பாட்டி வந்தாங்க. 

பேராண்டி எப்படி இருக்க? நல்லாருக்கியா?  சாப்பிடுறியா? கேட்டுச்சு.
அப்புறம் அவனை உத்து உத்து பார்த்துட்டே இருந்துச்சு...
இந்த சமயத்தில நம்ம கதையை நிப்பாட்டி பசங்க கிட்ட "ஏன்னு கேளுங்க'? என்று கேட்க சொல்லணும்.
"ஏன் கேட்டதும்?"

(ஒரு நிமிடம் கழிச்சி திடீர்னு காட்டுக் கத்து கத்து கிட்டு)  "அந்த மோதிரம் என்னோடது... ஏன்  டா விரலை வெட்டடுன?" கத்தனும்...

 அமைதியாய் இருந்த பாட்டி திடீர்னு கத்துனதும் பயந்து அடிச்சிட்டு ஓடுவான் பேரன்.... ( இதோட கதை முடியும்)
பேர மட்டும் இல்லை கதையைக் கேட்ட சின்னபசங்களும் ஓடுவாங்க...

நீங்களும் உங்களோட சின்ன பிள்ளைங்க கிட்ட இத சொல்லி ட்ரை பண்ணி பாருங்க. 
பாக்கலாம் 90 கிட்ஸ் விட 2k கிட்ஸ் பவர் சொல்வாங்க...
அவங்க இதுல எப்படின்னு பார்ப்போம்....
let's hav fun ..






Comments

Petchimuthu said…
இதுதான் அந்த பிக்பாஸ் கத்தி கதையா

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

பெண்ணின் பூரணத்துவம் ....