முகம் பார்க்கா முகநூல் நட்பு...
சர சர சார காத்து வீசும் போது; ஜாட பாத்து பேசும் போது;
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே...
என்ற பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டு இருந்தாள் மித்ரா...
பெயருக்கு ஏற்றார் போல் அனைவரிடமும் நட்புடன் பேசுபவள். ஆனால் அமைதியாக இருப்பாள் பெரும்பாலும். மித்ரா பொழுதுபோக்குக்காக கதை எழுதி அவளது பிளாக்கில் பதிவிடுபவள்.
......
இனியா கல்லூரிப் பேராசிரியர். புத்தக வாசிப்பு என்றால் உயிர்.. ஜாலியான நபர். எதுவும் ஈசியா கையாளுபவள். அனைவரோடும் எளிதில் பழகிவிடுவாள்.
ஃபேஸ்புக்(முகநூல்) நம்ம பாஷையில் மூஞ்சி புத்தகம்.. இன்று பலரின் உலகம் அதுவே...
பொழுது போக வேண்டும் என்பதற்காக பேஸ்புக்கை திறந்து இப்பொழுது முழு நேரமும் அதிலே மூழ்கிவிடுகின்றனர். அதுவே வாடிக்கையாகி விடுகிறது சிலருக்கு...
அதனால்தன் என்னவோ
மித்ரா ஃபேஸ்புக் அன்இன்ஸ்டால் செய்துவிட்டால்.
ஆனால் அவள் பின்தொடரும் சிலரின் பதிவுகள் ஃபேஸ்புக்கில் மட்டுமே இடம்பெறுகின்றன. அதனால் மித்ரா ஃபேஸ்புக் இன்ஸ்டால் செய்து அவளது முகப்பை லாக் செய்திருப்பாள்.
ஒருநாள் அவள் முகநூல் பக்கத்திற்கு ஒரு செய்தி
வந்தது...
"ஹாய் மித்ரா" என்று
ப்ரெண்ட் ரெக்ஸ்ட்வுடன்...
சிலநாள் கழித்து அவள்
"யார் நீங்க"? என்று பதில் அனுப்பினாள்..
உங்க தங்கச்சி படிக்கிற காலேஜ் ல வேலை பார்க்கிறேன்.. ( professor)
உங்க தங்கச்சி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ல உங்க பிளாக் லிங்கை போஸ்ட் பண்ணி இருந்தாள்..
பார்த்தேன். அதிலிருந்ததை படித்தேன்; பிடித்திருந்தது...
அதான் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பினேன் என்றாள்.
ஓஹ! உங்க பேர் என்ன?
இனியா
........
என்று மற்ற விபரங்கள் பேசி கொண்டு அவளை ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அக்சப்ட் (accept) செய்யாமல் மெசஞ்சரில் மெசேஜ் செய்தாள்.....
நாள்கள் ஓடியது ..
இனியா ஒரு கதைபோட்டி அறிவிப்பை மித்ராவிற்கு அனுப்பி வைத்தாள்.
மெசேஜ்யில்
"நீ போட்டியில் கலந்துக்கோ என்று அவளை ஊக்கபடுத்தினாள்".
அதை பார்த்துவிட்டு மித்ரா சரி எழுது பார்ப்போமா? என்று யோசித்தாள்.
கூகுள் மூலம் பல தகவல்களை அதற்காக திரட்டினாள். அவளுக்கு சில தகவல்கள் புத்தகங்கள் மூலமாக கிடைக்க வேண்டும் ஆனால் கொரோனா காலம் என்பதால் நூலகம் திறக்க வில்லை.
இதை அறிந்து கொண்ட இனியா அவளுக்கு தனது கல்லூரியின் மூலம் புத்தகங்களை அனுப்பினாள்.
அவளுக்குத் தேவையான குறிப்புகள் அனைத்தும் இனியா கூறினாள்.
இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். ஆனால் அவர்கள் புகைப்படத்தை இருவரும் பகிர்ந்து இல்லை. மெசஞ்சர் மூலம் மட்டும் பேசி கொண்டனர்.
போட்டி நிறைவு பெறும் நாளில் கதையும் அழகாக எழுதி முடிந்தது. மித்ரா அதை போட்டிக்கு சமர்பித்தால்.
இனியா தான் போட்டிக்கான கட்டணம் செலுத்தி இருந்ததால் அவளுக்கும் போட்டிக்கான முடிவு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் என்ற தகவல் செய்தியாக வந்தது.
கல்லூரி மூன்றாம் ஆண்டு பரீட்சை ஆரம்பித்தது.
அதற்கான வேலையில் மூழ்கிவிட்டாள் இனியா..
ரெண்டு வாரம் கழித்து:
இனியா மெசேஜ் செய்தாள்.
"ஹாய் மித்து!.
.....
பதில் இல்லை.
அவள் தங்கை நம்பரும் இல்லை. " சை! புது ஃபோன் மாற்றும் போது எல்லா நம்பர்யும் போச்சு ....
சரி! முதல மெசேஜ்ரில் பேசி வாட்ஸ்அப் நம்பர் வாங்கனும்...."
ஆனால் மித்ரா மெசேஜ் பண்ணவில்லை...
இனியா தினமும் மெசேஜ் செய்வாள். பதில் மட்டும் இல்லை...
ஒரு மாதம் கழித்து
போட்டிக்கான முடிவு என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.
"ஹே! நம்ம மித்து தான் முதல் பரிசு. இன்னைக்கு எனக்கு கண்டிப்பா மெசேஜ் பண்ணுவா; ஒரு கை பாக்கலாம் அவளை!. ஒரு பதிலாவது அனுப்பினாலா பாரு" என்று எண்ணியவாறே தனது வேலையை தொடர்ந்தாள்.
நொடிக்கொருதரம் செல்போனைப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
கல்லூரி முடித்து
சாலையைக் கடக்கும் போது. "ம்மா"... பைக்கில் மோதி இருந்தாள்.
கை கால்கள் நன்றாக சிராய்ப்பு. தலையிலும் லேசாக ரத்தம் வந்தது.
அருகிலிருந்த மருத்துவமனைக்கு வந்து முதலுதவி செய்து கொண்டாள்.
மருத்துவமனைக்கு வெளியே வந்து பார்க்கும் போது பார்த்தாள் அவள் வகுப்பில் பயின்ற மித்ராவின் தங்கை பிரியாவை.
வலியை மீறிய சந்தோஷம் இனியாவின் முகத்தில்.
ஓடிப்போய் அவள் கையைப் பிடித்து "மித்து எப்படி இருக்கா? என்று கேட்டாள்.
அவள் ஒரு பதிலும் சொல்லவில்லை மௌனமாக நின்றாள்.
"ஏன் அமைதியா இருக்க? அவ ஏன் எனக்கு ஒரு மெசேஜ் கூட பண்ணல? என்னாச்சு அவளுக்கு, பிரியா"? என்று கேட்டாள்.
அந்தப் பெண் இனியாவின் கையை பிடித்துக்கொண்டு மருத்துவமனையின் உள்ளே சென்றாள்.
"மித்ராவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு போல; அதான் மெசேஜ் பண்ணவே இல்லையோ. சரி! சரி! அவளுக்கு வேற ஏதும் பிரச்சனையோ? பிரியா, ஏன் என்னை எங்க கூட்டிட்டு போறா." அப்படின்னு பல சிந்தனையுடன் அவளை பின்தொடர்ந்தாள்.
151 வது ரூம்.
இனியா படுத்த படுக்கையாக கண் மூடி இருந்தாள்.
அக்காக்கு தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு போயி ஒரு மாசம் ஆகுது.
சொன்னதுதான் தாமதம் இனியாவுக்கு அழுகையாக வந்தது.
அவள் அருகில் சென்று மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.
"உன்ன நான் இப்படித்தான் பார்க்கணுமா? நாம் நேரில் பார்க்கணுகிறதுக்காக தானே போட்டோ கூட நாம் பகிர்ந்ததில்லை".
நர்ஸ் உள்ளே உள்ளே வந்து இனியாவை பார்த்தார். "நீங்க.... உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? ஆம், ஒரு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தீங்க. பிளட் டோனட் பண்ண.. எப்படி இருக்கீங்க? அட! என்ன ஒரு ஆச்சரியம். இந்த பொண்ணு உங்களுக்கு தெரியுமா? நீங்க தான் இந்த பொண்ணுக்கு ரத்தம் கொடுத்தீங்க..
இதைக் கேட்டதும் ஓ என அழுது விட்டாள்..
பிரியாவிற்கு ஆச்சரியம் தன் அக்காவுக்கு ரத்தம் கொடுத்த நபர் இனியா மேம் என்று.
பிரியா அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
"அழாதீங்க மேம்! உங்க தூய நட்பு தான் எங்க அக்காவை நினைவு இல்லைனாலும் உயிரோட வச்சிருக்கு. அவளுக்கு திடீரென ஆக்சிடெண்ட் ஆச்சு. அதுல நிறைய ரத்தம் போயிட்டு. நீங்க சரியான நேரத்துக்கு வந்து தான் பிளட் டொனேட் பண்ணி இருக்கீங்க". இல்லைனா அக்காவ பார்த்திருக்கவே முடியாது ரொம்ப தேங்க்ஸ் மேம்".
நர்ஸ் இருவரையும் பார்த்து,"அழாதீங்க இவர்களுக்கு சீக்கிரம் சரி ஆகிடும் சான்ஸ் இருக்கு. டாக்டர் பேசிட்டு இருந்தாங்க".
ம்ம்... அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்ச நேரம் பாத்துட்டு போங்க.
இருவரும் மௌனமாக வெளியேறினர்.
"மேம், இன்னைக்கு தான் நீங்க வந்திங்க.இன்னைக்கு தான் நர்ஸ் சொல்றாங்க அக்கா சீக்கிரம் சரியாயிடுவானு. உங்க நட்பு அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்தும் நான் நம்புறேன்".
அவள் சொல்லுவதை ஆமோதிப்பது போல் மித்ராவின் கால்கள் அசைந்தது மெல்ல...
(அத்தி பூத்தார் போல் பூக்கும் இணையத்தின் வழியே நல்ல நட்புகளும்)
Comments