மழையில் தொலைத்த மஞ்சள் குடை.. Yel(love) Umbrella
மனதை தொட்ட அமைதி
Chapter 8
மழை நின்னாலும், அந்த மழை இரவோட நினைவு மட்டும் அர்ஜூனின் மனசுல இன்னும் ஈரமா இருந்தது.
வீட்டுக்கு வந்ததும், ஹெல்மெட்டை table மேல வைச்சுட்டு பால்கனில நின்னான். எதிரே street-light வெளிச்சத்துல மழைத்துளிகள் இன்னும் ரோட்டுல மின்னிட்டு இருக்கு.
அவன் மனசுல நந்தினி சொன்னதும் கேட்டுட்டே இருந்ததுச்சு.
"எல்லா விசியத்துக்கும் நாம நினைக்கிற காரணம்தான் உண்மையான காரணமா இருக்காது".
"இல்ல... நா நினைக்கிறது தப்பா இருக்க முடியாது.." ன்னு அவனுக்கு அவனே சொல்லிகிட்டாலும் அவனால அமைதியா இருக்க முடியல.
அதே நேரத்துல மொபைல் வைப்ரேட் ஆச்சு.
நந்தினி: "வீட்டுக்கு safeah போயிட்டிங்களா"?
அந்த சின்ன அக்கறை அர்ஜூனின் உதட்டில் சிரிப்பை வர வைச்சுது.
"ஆமா... நீ?"
" நானும் வந்துட்டேன். தேங்கஸ்... இன்னைக்கு மனசு திறந்து பேசுனதுக்கு".
அவன் கொஞ்ச நேரம் அந்த screen பாத்துட்டு இருந்தான்.
"பல வருசமா யாருகிட்டையும் இவ்வளவு பேசல".
சில நிமிசத்துல பதில் வந்தது.
"சில காயம் பகிர்ந்தா தான் அது கொஞ்சம் லேசாகும்."
அந்த மெசேஜை படிச்ச அர்ஜூன் பதில் அனுப்பல.
ஆனா அந்த வார்த்தை அவன் மனசுல ஆழமா பதிந்த்து.
அடுத்த நாள்...
Dream Library. குழந்தைகளின் சிரிப்பு சத்தம் எப்போதும் போல கேட்டுட்டு இருந்துச்சு.
நந்தினி ஒரு பொன்னுக்கு புக் படிச்சு காமிச்சுட்டு இருந்தா.
வாசலில் நின்ன அர்ஜூனைப் பாத்து சிரிச்சா.
"குட் மானிக்!"
"குட் மானிக்...."
"நேத்து ரொம்ப எமோசனல் ஆகிட்டீங்களே..."
அர்ஜூன் சிரிச்சான்.
"சாரி..."
"எதுக்கு?"
"உன்னை bore ஆ இருந்துருக்கும்."
நந்தினி சிரிச்சா.
"அதுக்கு தான் friends இருப்பாங்க".
அந்த வார்த்தை திரும்ப அவன் மனச தொட்டுச்சு.
அன்னைக்கும் முழுசா இரண்டு பேரும் அங்கேயே இருந்து குழந்தைகள் கூட நேரம் செலவழிச்சாங்க.
ஒரு குட்டி பையன் ஒடி வந்தான்
"அண்ணா... நீங்க ஏன் seriousஆ இருக்கீங்க?"
அதை கேட்ட நந்தினி சிரிப்ப அடக்க முடியாம சிரிச்சா.
அர்ஜூன் சங்கடமா,
"நா seriousஆ இருக்கேனா?"
உடனே அந்த சிறுவன்,
"ஆனா அக்கா சிரிக்கும் போது மட்டும் நீங்க சிரிக்கீங்க..." ன்னு சொன்னான்.
அந்த ஒரு வரி...
இரண்டு பேரும் அமைதியாக்குச்சு.
நந்தினி வேறு பக்கம் திரும்பிட்டா.
அர்ஜூன் மெதுவா சிரிச்சான்,
முதல் முறையா...
அவன் சிரிக்கிறதுக்கு காரணம் யார்ன்னு அவனுக்கு புரியுது.
மாலை நேரம்...
libraryய மூடிட்டு இரண்டு பேரும் வெளிய நடந்தாங்க.
ரோட்டு ஓரமா இருந்த டீக்கடைல டீ குடிச்சாங்க.
அர்ஜூன்: "உன்னோட கனவு என்ன?"
நந்தினி கண் பிரகாசமாச்சு.
"ஒரு பெரிய லைப்ரேரி"...
"குழந்தைங்க பணம் இல்லாமலும் வந்து படிக்கலாம்"
"யாரும் புக் வாங்க காசி இல்லன்னு சொல்ல கூடாது."
அவ பேசும் போது இருந்த ஆர்வத்தை அர்ஜூன் ரசிச்சான்.
"உங்களுக்கு?"
அர்ஜூன் கொஞ்சம் யோசிச்சான்.
"எனக்கு எந்த ஒரு கனவும் இல்ல.. இப்போ வரைக்கும்".
"இப்போ வரைக்குமா?" ன்னு நந்தினி புருவத்தை உயர்த்தினா..
அவன் அவளை பாத்து மெதுவா சிரிச்சுட்டே.
"இப்போ.... வாழ்க்கை கொஞ்சம் அழகா மாறுது. மறுபடியும் வாழனும் தோனுது."
நந்தினி எதும் பேசல.
ஆனா, அவ முகத்தில் ஒரு நிம்மதியான சிரிப்பு தெரிஞ்சுது.
அன்னைக்கு நைட் போன அர்ஜூன், பல மாசமா திறக்காத தன் டைரிய எடுத்தான்.
ஒரு புது பக்கத்தை திறந்து, ஒரு வரி எழுதினான்.
"இன்னைக்கு ... பல வருசம் கழிச்சு நா மனசார சிரிச்சேன்."
அதுக்கு கீழ அவ அறியாமலே நந்தினின்னு எழுதிட்டான்.
அப்பறம் தான் அத அவன் கவனிச்சான்.
கொஞ்சம் நேரம் அத பாத்துட்டே இருந்தான்.
அப்பறம் டைரிய மூடிட்டான்.
அவனுக்கு புரிஞ்சுட்டு.
இது வெறும் நட்பு மட்டும் இல்லன்னு
ஆனா,
அத காதல்ன்னு அவன் மனசு ஒத்துக்க இன்னும் தயார இல்ல...
To be continued....

Comments