அகம் புறம்...
தினம் தினம்
முகமூடி போடுகிறோம்
அகத்திற்கும் புறத்திற்கும்...
காலத்திற்கு ஏற்ப; மனிதர்களுக்கு ஏற்ப; விருப்பங்களுக்கு ஏற்ப;
தொழிலுக்கு ஏற்ப;
போடும் முகமூடிகள் அநேகம்...
10 மாதம் தாயின் கருவறையிலும்,
சாகும் தருவாயிலும் மட்டுமே மறக்கிறோம் முகமூடியை
அகத்திற்கு புறத்திற்கும் போட...
புறம் அழகாக
அகத்தில் வஞ்சம் சேர்க்காதீர்கள்...
அகத்தில் நேர்மை இருந்தால்;
புறத்தில் தானாய் ஒட்டிக்கொள்ளும் கம்பீரம்...
அகமும் புறமும் அழகாக
சக மனித உணர்வுகளை
மிதிக்காமல் மதித்து நடப்போம்....
Comments