சில பேரை வயசு பெரியவர்களாக்காது… வாழ்க்கைதான் பெரியவர்களாக்கும்
நம்ம எல்லாருக்கும் childhood ஒரே மாதிரி இருக்காது.
சில பேருடைய வாழ்க்கை ஸ்கூல், காலேஜ், ப்ரேண்டஸ், ஃபன், ட்ரீம்ஸ்ன்னு இயல்பா இருக்கும்.
ஆனா சிலரோட வாழ்க்கை அப்படி இல்ல.... அந்த வயசுக்கான carefree life வாழ முடியாது.
ஒரு நாள், தீடீர்னு ஒரு சம்பவம் எல்லாத்தையும் மாத்திடும்.
அந்த சம்பவத்துக்கு பிறகு, அவங்க முன்னாடி இருந்த மாதிரி இருக்கிறதில்ல.
When responsibility comes too early..
ஒரே குடும்பத்தில்ல தீடீர்னு அப்பா இறந்துட்டாங்க வச்சுக்கோங்க.
நேத்து வரைக்கும் அப்பாகிட்ட எல்லாமே கேட்ட பையன் இன்னைக்கு எதிர்காலத்தை பத்தி யோசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு வரலாம்.
"அம்மாவை எப்படி பாத்துக்க முடியும்?"
"வீட்டுச்செலவு எப்படி?"
"தம்பி, தங்கச்சி படிப்பு?"
" நான் வேலைக்குப் போக வேண்டுமா?" ன்னு அவங்களுக்கு நிறைய எண்ணம் வரலாம்.
அவனுக்கு அந்த responsibilityக்கு தயாராகும் நேரம் கிடைத்திருக்காது.
ஆனா வாழ்க்கை அவனுக்காக காத்திருக்காது.
சில நேரங்களில் responsibility முதலில் வருகிறது; maturity அதற்குப் பிறகு வருகிறது.
இது பசங்களுக்கும் மட்டும் இல்ல, பொன்னுங்களும் பொருந்தும்.
அப்பாவை இழந்த ஒரு young girl, தீடீர்னு அம்மாவுக்கும் குடும்பத்திக்கும் support ஆக வேண்டிய நிலைக்கு வரலாம்.
தம்பி, தங்கையோட படிப்பு.
வீட்டுச் செலவு...
வேலை.
தன்னோட future...
எல்லாத்துக்கும் ஒரே நேரத்துல யோசிக்க வேண்டியிருக்கும்.
அவளுக்கும் dreams, carefree life வேண்டும்.
ஆனா சில நேரங்களில் அவ தன்னுடைய ஆசைகளை.
"இப்போ வேண்டாம்... முதலில் குடும்பம்." ஆசைய பின்னால் வைக்கிற மாதிரி இருக்கும்.
RESPONSIBILITY HAS NO GENDER..
அதனால Responsibilityஐ boys girls என்னு பிரிக்க முடியாது.
family situation யார் மீது விழுதோ, அவங்க சுமக்க வேண்டிய நிலைக்கு வரலாம்.
சிலருக்கு அப்பாவோட இறப்பு.
சிலருக்கு அம்மாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பு.
பொருளாதார பிரச்சனை காரணமா இருக்கலாம்.
தம்பி தங்கச்சி பாத்துக்க வேண்டிய பொறுப்பு வரலாம்.
இப்படி ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு கதை..
WE SEE MATURITY , BUT NOT THE STORY BEHIND IT.
வெளியில் இருந்து பாக்கும் போது,
இவங்க ரொம்ப MATURE, SERIOUS ன்னு தோணும்.
"முன்னாடி இருந்த மாதிரி இப்போ இல்ல"ன்னு சொல்லிடுவோம்.
ஆனால் அந்த MATURITYக்கு பின்னால் என்ன இருக்கும் நமக்கு தெரியாது.
அதனால ஒருத்தரை PRESENT BEHAVIOUR ஐ மட்டும் வைச்சு JUDGE செய்வதற்கு முன்...
"இவர் என்ன கடந்து வந்திருப்பார்?" ன்னு ஒரு தடவை யோசிச்சு பாருங்க..
THE STRONG ONE NEEDS SUPPORT TOO..
RESPONSIBILITY இருக்குறவங்க எப்பவும் STRONGஆ இருக்கனும் நினைக்க கூடாது.
அவங்களுக்கு சோர்வா, பயமா, இருக்கும்.
அவங்களும் ஒரு நாள்,
"யாராவது என்னையும் பாத்துகிட்டா நல்லா இருக்கும்..." ன்னு தோணும்.
அதனால நம்ம சுத்தி எல்லாரையும் பாத்துக் கொள்ளும் ஒருத்தர் இருந்தார், அவர்கிட்ட கேக்கலாம்..
" நீங்க ஒகே வா இருக்கீங்களா"?
சில நேரங்களில் அவங்களூக்கு ADVICE தேவையில்ல.
SOLUTION தேவையில்ல.
யாராவது தன்னை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாங்கன்னு ஒரு உணர்வு போதும்.
கடைசியா,
ஒரு பையனா இருந்தாலும் சரி...
ஒரு பொன்னா இருந்தாலும் சரி...
சின்ன வயசுல RESPONSIBILITY எடுத்துக்க வேண்டிய சுழ்னிலை வந்தால் அவங்களை "STRONG PERSON" னு டேக் பண்ணாம
அவங்களுக்கு கனவு இருக்கும், ஒய்வு வேணும்,
அவங்களுக்கும் யாராவது,
"நீ தனியா இல்ல, நா இருக்கேன்."ன்னு சொல்ல வேண்டும்.
ஏன்னா,
சில பேரை வயசு பெரியவங்களாக்காது,
வாழ்க்கை தான் பெரியவர்களாக்கும்..
உங்க வாழ்க்கையிலேயும் சின்ன வயசுல RESPONSIBILITY எடுத்துக்க வேண்டிய நிலைக்கு வந்த யாராவது இருக்காங்களா?
அவங்க கிட்ட நீங்க சொல்லாம விட்ட வார்த்தை இருந்தா...
ஒரு வேளை அது:
" நீ எல்லாத்தையும் தனியா சுமக்க வேண்டியதில்லை." 💞

Comments