அழகு...💕
கண்ணுக்கு மை அழகு...
கரு(மை)க்கு *வளியில்
இருக்கும் *மஞ்சு அழகு
வருடும் தென்றல் அழகு...
முன் நெற்றி முத்தம் அழகு...
குழந்தை அழுகை அழகு..
அதை விட சிரிப்பு அழகு ..
சின்ன நடை அழகு ..(மகள்)
சிங்க நடை அழகு..(மகன்)
கொஞ்சும் தமிழ் அழகு ..
ரெண்டை பின்னல் அழகு ..
வெட்க சிரிப்பு அழகு...
அறுப்பு மீசை அழகு...
வெள்ளி முடி அழகு...
பெரியோர் சொல் அரிது..
அதை ஏற்று நடப்பது மிக அழகு ...
*வளி- காற்று.
* மஞ்சு - மேகம்.
Comments