2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள், ஏன் இன்னும் வாழ்க்கையை மாற்றுகிறது??

 திருக்குறள்- 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டாலும் இன்றும் அது வாழ்க்கையை வழி நடத்துகிறது. திருவள்ளுவர் எழுதிய இந்நூல் இலக்கியம் மட்டுமல்ல; வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு அற்புதமான நூல்.

திருக்குறள் -  உலகளாவிய நூல் 

தமிழில் எழுதப்பட்டாலும் இதன் கருத்து எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு குறளும் ஏழு சொற்களால் ஆனது மட்டுமல்ல அதற்குள் அடங்கி இருக்கும்  ஆழ்ந்த தத்துவம் நம்மை ஆச்சரியப்படுத்தும் .

உதாரணம்:

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு"

அறிவு எப்படி ஆரம்பிக்கிறது என்பதை சொல்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை வேண்டும் என்பதை சொல்லுகிறது... 

தினசரி வாழ்க்கையில் திருக்குறள்: 

பழமையான நூல்கள் பின்பற்ற கஷ்டம் என்று நினைக்கலாம். ஆனால் திருக்குறள் மிகவும் எளிது. 

💚அறம்- நல்ல வாழ்வு எப்படி வாழ வேண்டும் 

💙பொருள் -செல்வத்தை எப்படி சம்பாதிப்பது, நடத்துவது 

💚இன்பம்- மகிழ்ச்சியை அனுபவிப்பது 

இந்த மூன்று பகுதியும் சேர்ந்து முழுமையான வாழ்க்கை மேலாண்மை ஆகும் இந்த திருக்குறள் நூல் .

உதாரணம் :

"அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

  இழுக்கா இயன்றது அறம்"

 பேராசை ,பொறாமை ,கோபம், கெட்ட வார்த்தை-  இவை நம்மை அழிக்கக்கூடியது. இது அலுவலகத்தில், வீட்டில், சமூக வலைதளங்களில் எவ்வளவு தேவையான அறிவுரை பாருங்க!!

💫இன்றைய காலத்துடன் தொடர்பு 

  • வணிகத்தில்-  நேர்மையும், நியாயமும் 
  • குடும்பத்தில் -பொறுமையும் அன்பும்
  •  தனிப்பட்ட வளர்ச்சியில்- கோப கட்டுப்பாடும் ஒழுக்கமும் 

ஒவ்வொரு குறளும் ஒரு வாழ்க்கை குறிப்பு; இன்றைய self-help புத்தகங்களை விட சிறந்தது.

👉 எனது அனுபவம்

நான் குடும்பத்தில்லையோ, மன அழுத்தத்தில்லையோ இருந்தால் ஒரு குறள் எடுத்து படிப்பேன். ஒவ்வொரு முறையும் திருக்குறள் எனக்கு நேரடியாக பதில் சொல்வது போல இருக்கும். அதனால்தான் நான்  spotifyல திருக்குறள் சீரிஸ்ன்னு தொடங்கினேன். இந்த காலத்துக்கு தேவைபடுற ,அனைவருக்கும் பகிரனும் தான். 

Thirukural


 திருக்குறள் பழைய நூல் அல்ல; அது என்றும் புதியது. மாணவர், இல்லதரிசிகள், பணியாளர், தொழிலதிபர், யாராக இருந்தாலும் உங்களுக்கான குறள் ஒன்று இருக்கிறது. அதனால் தான் 2000 ஆண்டுகள் கடந்தும் திருக்குறள் நம்மை வழி நடத்தி கொண்டே இருக்கிறது..

Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

பெண்ணின் பூரணத்துவம் ....