தனிமை

கடல் காற்று தீண்ட 
சுற்றிலும் சத்தம் இல்லாமல் 
இசை கேட்பது வரம்.....

சுற்றிலும் சிரிப்பு சத்தம் கேட்க
சுற்றி சொந்தங்கள் சூழ 
நீ மட்டும் தனியாய் உணரும்
தருணம் கொடுமை...

ஆயிரம் பேர் இருந்தாலும்
 நீ பேசி சிரிக்க அழ
 ஒரு ஆள் இருந்தாலே வரம்....

நீ நேசித்தவர்கள் 
கஷ்டப்படும் நேரத்தில்
உனக்கு தோள் கொடுக்காதது
கொடுமை....
எத்தனை அவசரத்திலும் 
உனக்காக ஒரு நேரம் 
ஒதுக்கும் உறவு வரம்...

சும்மாவே இருந்தாலும் 
ஒரு மணித்துளி நேரம் 
ஒதுக்காத உறவு கொடுமை.....






Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)