கடவுள்...

வணக்கம் மக்களே!
என்னடா ரொம்ப நாளா ஆள காணோம் அப்படின்னு நீங்க கேட்கறது என் காதுல கேட்குது..
என்ன பண்றது கன்டென்ட் சரியா கிடைக்கவே இல்ல சோ நானும் அப்படியே யோசிக்கிட்டே இருந்தேன்...
அப்பதான் என் தோழி என் தங்கை நித்யா மாரியப்பன் அவங்க சொன்னாங்க "அக்கா! நீங்க வந்து கன்டன்ட் இல்லை யோசிக்காதீங்க. நிறைய இருக்கு. புக்ஸ் பத்தி கூட நீங்க   என்ன நினைக்கிறீங்க அதைச் சொல்லலாம்." சொன்னாங்க.
உடனே என் மண்டைக்குள்ள டான்னு ஒரு மணி அடித்தது.

என்னோட  போட்காஸ்டு ல
நான் ஒரு புக்கை பத்தி பதிவு பண்ணி இருந்தேன். எத்தனை பேரு என்னோட போட்காஸ்ட் கேட்கீங்கன்னு எனக்கு தெரியாது.  சரி அதையே இங்க நா எழுதுகிறேன். 
(It's not a book review dears....)

நந்திபுரம் புத்தகத்தின் பெயர். ஆசிரியர் இந்திரா சௌந்தரராஜன்.
ஒரு கிராமத்துல ஒரு பழமையான சிவன் கோயில் இருக்கு . அந்த கோயில்ல புதையல் இருக்கு. அதை தேடிக்கட்டு நிறையபேர் வருவாங்க. ஆனா அந்த புதையலை
 நந்தி பெருமாள் மற்றும் சித்தர்கள் காவல் காக்கிறார்கள். இது சித்தர்கள் பத்தின கதையும் கூட. இந்த புத்தகத்தின் மூலமாக வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி நம்ம நல்லா தெரிஞ்சுக்கலாம்.  எனக்கு கடவுளை பத்தின சில தெளிவான விளக்கமும் கிடைச்சது.
எப்பவுமே ஏன் இத்தனை கடவுள் இருக்காங்க? ஏன் இத்தனை உருவத்திலே இருக்கிறாங்கணு அப்படினு கேள்வி எனக்கு வரும்.  (எல்லாத்துக்குமே வரலாம்.)

அதற்கு சிறந்த  விளக்கமா நான் அந்த புத்தகத்தில் நினைக்கிறது என்னன்னா 
 (சிறு உரையாடல் சித்தர்க்கும்  ஒரு பெண்ணுக்கும் பின்வருமாறு
பெண்; "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது திருமூலர் வாக்கு. பின் ஏன் இத்தனை சன்னதி? இத்தனை தெய்வம்? இவர்கள் நம் போல் பிறந்து மறைந்தவர்களா?
சித்தர்; சூரியன் பூமியில் உடைந்து கிடக்கும் கண்ணாடி துண்டுகளில் தென்படுகிறான். அதற்காக கண்ணாடி துண்டுகளில் தெரியும் அனைத்தும் சூரியனே என்றா நாம் கருதுகிறோம். சூரியன் ஒருவனே அதைப்போல இறைவனும் ஒருவனே.

பெண்; பின்னர் ஏன் இத்தனை கடவுள்? 
சித்தர்; நம் வாழ்வு என்பது பல வித சலனங்களால் ஆனது. நாம் ஒருவரைப் போல் இன்னொருவர் இருப்பதில்லை. மாறுபாடுடன் இருப்பதாலே அடையாளங்கள் புலனாகும். என் முகம் போலவே எல்லோருக்கும் இருந்தால் பிரித்துப் பார்ப்பது கடினம். இதனாலேயே வேற்றுமைகள் சிருஷ்டியில் தோன்றின. சுருக்கமாகச் சொன்னால் சிருஷ்டி வினோதம். அந்த வினோதமே வாழ்க்கையே சுவாரஸ்யமாகிறது... இந்த மன அமைப்புக்கு ஏற்ப வடிவம் கொண்டு இருப்பதே நம் ஆன்மிக நெறி. ஒன்றை பலவாக கண்டு பின்பு அந்தப் பலவும் ஒன்று என்று உணர்வதே நம் ஆன்மீக முதிர்ச்சி.
அந்த ஒன்றுதான் பரம்பொருள்...

பெண்: நம் வாழ்வோடும் மனதோடும் தொடர்பு படுத்தி சொல்லும்போது இது எனக்கு புரிகிறது. ஆனால் இப்படி பலவாக இருப்பது ஒன்றுதான் என்று உணராமல் அவரவர் வணங்கிடும் தெய்வம் உண்மை என்று சொல்கிறார்களே? ஒன்று பலவாக இருப்பதால் தானே இப்படி சொல்கிறார்கள்.
சித்தர்; இது ஒருவகை அறியாமையே. அவர்களுக்கு முதிர்ச்சி ஏற்படும் போது அவர்கள் சொன்ன பிழை தெரிந்து விடும்.

பெண்: ஏன் இறைவனை கண்களால் காண முடிவதில்லை?
சித்தர்: தெய்வம் புறத்தில் இருப்பதாக கருதுவதுனாலயே இந்த கேள்வி பிறக்கிறது. நமக்குள் தான் இறைவன் இருக்கிறான். அதை நாம் உணர்வதில்லை. கோயிலின் உள்ளே சென்று தெய்வத்தை வணங்கும் போது உள்ளே உள்ள தெய்வத்தை நம்முள்ளே நாம் சில நிமிடங்களாவது இருப்பதாக நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஆலய வழிபாடு இருக்கிறது.
மனம் விசித்திரமானது. இதை அடக்க நினைத்தால் அடங்காமல் இருக்கும்; அறிய முயன்றால் அப்படியே கட்டுப்பட்டு விடும். நம் மனதின் தன்மையை கொண்டே நம் சான்றோர்கள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தனர்.
இப்படியாக அந்த உரையாடல் இருக்கும்.)

சோ, எனக்கு புரிந்தது என்னன்னா இறைவன் நம்முள்ளே இருக்கிறான். அதை நாம் உணராமல் தான் அவன் ஏன் பல வடிவத்தில் இருக்கிறான்? பல பெயர் கொண்டு இருக்கிறான் என்று கேள்வி நமக்குள் ஒரு உதயமாகிறது என்று.

எல்லா மதங்களுமே "அன்பு ஒன்றே கடவுள்" "அனைவரும் சமம்" "பிறருக்கு உதவி செய்! "மற்றவரை  வார்த்தையால் செயலால் புண் படுத்தாதே" என்றே சொல்கிறது.

"கடவுள் ஒருவனே" அதைப் பிரித்து வைத்தவன் மனிதனே!

நன்றிகளுடன், 
சக்தி....




Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)