காயம்....

மாலையில் ரவி பம்பரம் சுற்றி விளையாடினான் அவன் சக தோழர்களுடன். ரவி ஒரு முரட்டு பையன். தந்தை இல்லாதவன். தாயின் மீது அளவில்லாத பாசம் கொண்டவன். அவனை அடக்கும் சக்தி அவன் தாயின் அன்பிற்கு மட்டுமே உண்டு.

விளையாட்டில் சக தோழர்களுடன் சண்டையிட்டு ஒருவன் தலையில் கல்லை கொண்டு வீசி விட்டான்.
தலையில் இரத்தத்தை பார்த்ததும் ஓடி வந்துவிட்டான் வீட்டிற்கு.

வீட்டிற்கு வந்த மகனை பார்த்து தாய் ,"கை கால் கழுவிட்டு வா ராசா. காபி கொண்டுவரேன்.   நீ சமத்தா படிச்சு, நல்ல புள்ளையா இருந்தா தான் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்" என்றாள்.


இவன் உள்ளமோ குறுகுறுத்தது. வாய் ஒன்றும் பேசாமல் "ம்ம்ம்" சொன்னான்.

வெளியில் நண்பனின் தாய் கத்தினாள்.

"என்ன சத்தம் ? என்றவாறே ரவி அம்மா  வெளிய போனால்.

"பிள்ளையா பெத்து வச்சிருக்க. இப்படியா என் மகனை அடிப்பான்? பாரு, என் மகன் தலையில் அடிப்பட்டு இரத்தம் வருது."

ரவி திருதிருவென முழித்து "அம்மா தெரியாம பண்ணிட்டேன். இனிமே அப்படி பண்ண மாட்டேன்" என்று அழுதான்.

ரவி தாய் ஒன்றும் சொல்லவில்லை. அவள் மனம் அழுதது.

"ம்மா.. என் புள்ள தெரியாம பண்ணிட்டான். நான்  கண்டிச்சு வைக்கேன். இனிமே, இப்படி நடக்காம பார்த்துக்குறேன். மன்னிச்சிடுங்க." என்று காலில் விழுந்தாள்.

ரவியின் உள்ளம் நொறுங்கி விட்டது.
நண்பனின் அம்மா காலில் விழுந்த உடன் அமைதியாக சென்று விட்டார்.

ரவி அம்மாவை பார்த்தான். அம்மா அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

"மன்னிச்சிடு மா. அப்படி பாக்காத அம்மா.இனிமே அப்படி பண்ண மாட்டேன்" என்றான்.

வாய் பேசவில்லை தாய்: சென்று விட்டாள்.
அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள். அமைதியாக அமர்த்து சாப்பிட்டு படிக்கச் சென்றுவிட்டான். தாய் சாப்பிடவில்லை பேசவுமில்லை.
மறுநாளும் பேசவில்லை.

மூன்றாம் நாள்,
தாய் இரவில் தண்ணீர் குடிக்க எழுந்தாள். ரவி தூங்கவில்லை. அழுதுகொண்டே அவன் அம்மாவின்  காலை பிடித்து "அம்மா இனிமே அப்படி பண்ண மாட்டேன்.நீ சொன்ன மாதிரி நல்ல பிள்ளையாய் இருப்பேன்..நல்லா படிப்பேன். என்கிட்ட பேசு அம்மா" என்று அழுதான்.

தாயும் கண்ணீரோடு அவனை அணைத்தாள்.

ஒரு மாதம் கழித்து, அவன் நடத்தையில் மாற்றம் இருத்தது. படிப்பில் கவனம் செலுத்தி முதல் மதிப்பெண் கூட எடுத்தான்.

ரவி அம்மா " நான் அடிச்சா கூட காயம் வந்திருக்குமே தவிர  அவன் செய்த தப்பு தெரிந்திருக்காது.
இந்த காயம் ஆறாது;
அவன் வாழ்க்கையில் முன்னேற... என்று நினைத்து  மகிழ்ந்தாள்.

*****


Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)