கேள்வி????
என் மகன் எப்பவும் கேள்வி கேட்டுட்டே இருப்பான்.
திடீரென்று ஒருநாள், "என்னிடம் வந்து சூரியன் உடைய வீடு எங்க இருக்குது"?கேட்டான்."நானும் வானத்தில"ன்னு சொன்னேன்.
அவன், "இல்லம்மா! சூரியன் மலைக்கு🌄 உள்ளிருந்து தானே வருது. அப்போ மலை தான் அதோட வீடு அப்படின்னு சொன்னா."
"கடவுள் எங்க இருக்காரு?
எதுக்கு நிறைய கடவுள் இருக்கு?
நம்ம ஹிந்துவா கிறிஸ்டியனா ? பின் ஏன் மாதா கோயிலுக்கு போறோம்?
நம்ம இறந்த உடனே எங்கம்மா போறோம்".
இப்படிப் பலப்பல கேள்விகள் கேட்பான்...
சில சமயம் பதில் அவனுக்கு எப்படி சொல்ல வைத்து சொல்லி புரிய வைக்கணும் எனக்கு தெரியாது..
இப்படித்தான் ஒருநாள் ஜகமே தந்திரம் படம் பாத்துட்டு அதில் அகதிகளை எல்லாம் ஒரு குழியிலே எரிப்பார்கள். அதை பார்த்துவிட்டு அவங்களும் மனுஷங்கதானே ஏன் மா ஒருத்தருக்கொருத்தர் அடிக்காங்க? எரித்தால் அவங்களுக்கு வலிக்கும்ல என்று கேட்டான். நான், "இறந்தவர்களுக்கு உணர்வு இருக்காது. அதனால வலிக்காது சொன்னேன். அப்ப நான் இறந்தாலும் அப்படித்தானே அழுதுகொண்டே கேட்கிறான்.
அவனை சமாதானப்படுத்த ஒரு தாயாய் நான் பட்ட பாடு போதும்...
இப்படி பலபல கேள்விகள்???
அவை எல்லாவற்றுக்கும் என் பதில் "நீ பெரிய பையனா வளர்ந்தா உனக்கு புரியும்" சொல்லுவேன்.
பல பல கண்டுபிடிப்புகளின் ஆரம்பம் கேள்விதான்.
ஆனாலும்,
சின்ன வயசுல கேள்வி கேட்கிறது சரிதானா? இப்படி கேள்வி கேட்ட குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது?
அவர்களுக்கு புரியும்படி எப்படி சொல்வது?...
நான் சரியாதான் வளர்க்கிறேனா?
இப்படி என்னுள்ளும் கேள்விகள்....
"கேள்வில் இருந்து கிடைக்கும் பதில்.
பதில் இருந்து தொடங்கும் கேள்வி?"
கேள்விகள் முடிவற்றது...
Comments