அவா...
காலைப் பொழுதில்
இளந் தென்றல் வீச
உன்னோடு இலக்கற்ற பயணம் போக அவா...
அந்திப்பொழுதில்
இரு பக்கமும்
மரங்கள் சூழ
சாலையில் உன்
கைகள் கோர்த்து உன்னோடு நடக்க அவா..
வெண்மதி இரவில்
கடல் அலைகள்
கரையோடு விளையாட
நான் உன்னோடு அளவில்லா கதை
பேச அவா...
கண்ணோடு கண்கள் சேர்த்து இமைக்காமல் காதல் மொழி
பேச அவா...
வாய்மொழி பேசாமல்
உன் மனம் மொழி
கேட்க அவா....
உன் நெஞ்சில் சாய்ந்து
உன் இதயத்தின் ஒலி
கேட்க அவா...
உன்னை புண்படுத்திய
சிலர் முன்னால்
உன்னை தலை நிமிர்த்தி உன்னோடு வாழ அவா...
உன் இதயத் துடிப்பு
நிற்கும் வேளையில்
என் இதயத் துடிப்பும்
நிற்க அவா....💞
Comments