பெண்ணின் பூரணத்துவம் ....

 பெண்ணின் பூரணத்துவம் 




     பெண் பிறந்ததிலிருந்து கூடவே பயணித்த தன் சகோதரி, சகோதரன், கூடப் படித்த தோழியர், பெற்றோர், ஆசிரியர் ஏன் ஊரையும் சேர்த்தே பிரிகிறாள்.

திருமணமானதும் மணம் புரிந்த கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டார்களுடன் பயணிக்கிறாள். குழந்தைகளுக்காகவே வாழ்ந்து அவர்களை உலகம் என்று வாழ்ந்து வந்தவளுக்கு மகளின் திருமணம் என்பது இரண்டாவது பிரிவு.

மகளுக்கு திருமணம் முடித்து பேரன் பேத்திகளில் பொக்கிஷத்தை காண்கிறாள். மகனுக்கும் திருமணம் முடிந்து மருமகளும் வந்த பிறகு தன் சந்ததியை வளர்க்க வந்த பெண்ணுக்கு தன் மகனை விட்டுக் கொடுக்கிறாள். இதுவே மூன்றாவது பிரிவு.

இறுதியில் கணவனோடு வாழ்ந்து அவளது இறுதி மூச்சு விடும் போது அவள் கொண்ட உயிர் பிரியும்போது நான்காவது பிரிவு.

ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் அவளுக்கு புது உறவு கூடுகிறது.

*தாய் தந்தையை பிரிந்து கணவனோடு உறவு கூடுகிறது.

*மகளைப் பிரிந்து மருமகன் ஓடும் பேரன் பேத்திகளுடன் புது உறவு கூடுகிறது.

*மகனோடும் மருமகள் ஓடும் தன் சந்ததி வாழும் புது உறவு கூடுகிறது.

ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் பெண்மை மெருகேறுகிறது.

*இறுதியில் இறைவன் பால் உறவு முடிகிறது.

"மகளாக பிறந்து ;மனைவியாக மிளர்ந்து; தாயாக பரிணமித்து;  மாமியார் ஆக உயர்ந்து; பாட்டியாக மெருகேறி பூரணம் ஆகிறாள்". பெண்ணின் பூரணத்துவம் இதுதானோ!



டாடா,

சக்தி.

Comments

Unknown said…
Really great sakthi 😍throughout the lines are really wonderful....
Petchimuthu said…
உண்மையான வரிகள்
Priya said…
Really superv... All the best..👌

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)