தயக்கம் ஊக்கமாக மாறிய கதை...

 விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.


புதன் காலை 9 மணி 

ஸ்கூல் மணி அடித்தது. அசம்பிளி (assembly) கூடியது. கிளாஸ் வரிசையா எல்லோரும் நின்னோம். 

தலைமை ஆசிரியை வந்தாங்க. தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து பாடி முடித்ததும்  ஹேண்ட் ரைட்டிங் போட்டிக்கான முடிவு வாசிச்சாங்க.

8வது ஸ்டாண்டர்ட் படிக்கும் மாணவி நடுக்கத்துடன் நின்றாள். ஆம் அவள் தமிழ் ஹேண்ட் ரைட்டிங் போட்டியில் கலந்து இருந்தா.

முதல்முறையா போட்டியில் கலந்து கொண்டது இதுதான். அதுவும் அவளோட தமிழ் ஆசிரியரின் உதவியோடும், ஊக்கத்தோடும்.

 அவளுக்கு பயம் என்னன்னா, "ஹாண்ட் ரைட்டிங் நல்லா இருக்குன்னு தெரியும் ".ஆனா பெருசா போட்டின்னு கலந்து கிடையாது.

ஹேண்ட் ரைட்டிங் நல்ல எழுதுவதுகூட திறமைதான். அப்படிங்கிறது அவளோட ஆசிரியர் சொல்லி தான் அவளுக்கு புரிந்தது.

தலைமைஆசிரியர் ஒவ்வொரு ஒவ்வொருத்தரா பரிசு கொடுத்தார்கள். இங்கிலீஷ் ஹாண்ட் ரைட்டிங் தனியா, தமிழ் ஹாண்ட் ரைட்டிங் தனியா பரிசு கொடுத்தார்கள் .இவள் கலந்து கொண்டது தமிழ் ஹாண்ட் ரைட்டிங் போட்டியில்.

பரிசு பாத்திரங்களை ஒரு மாணவி எடுத்து கொடுத்து கொண்டிருந்தாள் தலைமை ஆசிரியருக்கு. தலைமையாசிரியர்  மைக்கில் அவளது பெயரை வாசித்தார். முதல் பரிசு தட்டிச் சென்ற மாணவி சக்தி. இவளுக்கு தலை, கால் புரியல பயமாயிருந்தது. பரிசு வாங்குவதற்கு மெதுவா அடி மேல் அடி வைச்சு நெஞ்சு படபடக்க  அந்த ஸ்டேஜுக்கு போறா. வணக்கம் சொன்னாள். அங்க போய்  இவள் பரிசுப் பொருளை கொடுத்துக்கொண்டிருந்த மாணவியிடம் பரிசு பொருளை வாங்கி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால்.   (பயபுள்ள பயந்து போயி என்ன பண்றதுனே தெரியல😌) தலைமை ஆசிரியர் முகம் ஒரு கணம் கடுமையானது. பின் சிரித்துக்கொண்டே "அவள் எனக்கு பரிசு கொடுக்கிறாள்" என்றார்.  பயந்து போய் விட்டாள். "சாரி மேடம் "என்றாள். சிரித்துக்கொண்டே என் முதுகில் தட்டி," தயங்காதே! பயப்படாதே !இதுபோல நிறைய பரிசுகள் வாங்க  வேண்டும்" அப்படின்னு சொல்லி தட்டிக் கொடுத்தார்கள். ஆம்! அது நான் தான். நான் பெற்ற முதல் பரிசு அதுவே. என் தமிழாசிரியர் பெயர் ரத்தினம்.எப்படி இருக்காங்கன்னு? தெரியவில்லை. தமிழின் மேல் சிறிது பற்றும் எழுத்து ஆர்வம் வர காரணம் அவர்களே. நன்றி ஆசிரியர். 🙏

Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)